உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என நிரூபித்தால் விமான டிக்கெட் அமைச்சர் சுப்பிரமணியன் சவால்

மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என நிரூபித்தால் விமான டிக்கெட் அமைச்சர் சுப்பிரமணியன் சவால்

சென்னை: ''அரசு மருத்துவமனை களில் நாய்க்கடி, பாம்புக்க டிக்கு மருந்து இல்லை என யாராவது நிரூபித்தால், எந்த ஊருக்கு வேண்டு மானாலும் செல்ல விமான டிக்கெட் வாங்கி தருகிறேன்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சவால் விடுத்தார். சென்னை மாநகராட்சி மணலியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், 2 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். முகாமில், குழந்தை நலம், மூக்கு - தொண்டை - காது உள்ளிட்ட, 17 வகையான சிகிச்சைகளுக்கான மருத்துவம் அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறன் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பருவமழை முன்னெச்சரிக்கையாக, சென்னை மாநகராட்சியில், 3,081 கி.மீ., துாரத்திற்கான மழை நீர் வடிகால் துார்வாரும் பணி நடக்கிறது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், பருவமழை காலங்களில், ஒரே நாளில், 2,000 முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல, இந்த முறையும், தேவை இருக்கும் இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என, தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், எந்த அரசு மருத்துவமனையிலும் மருந்தில்லை என்று கூறுவதில்லை. பொதுவாக மருந்தில்லை என்கின்றனர். எந்த மருத்துவமனையில் மருந்தில்லை என்று கூறுங்கள். கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏதேனும் ஒரு கிராமத்தில் மருந்தில்லை என்றாலும், நானே விமான டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட் போட்டு தருகிறேன். எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நிரூபிப்பவர்கள் செல்லலாம். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும், நாய் மற்றும் பாம்புக்கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

முதல் தமிழன்
ஆக 31, 2025 16:35

சுத்தம் சுகாதாரம் இல்லை. ஊசி ஒவ்வொருத்தருக்கும் புதுசா பயன்படுத்துறாங்களா என்று எனக்கு அச்சம். நிறைய குறை இருக்கு ஆனாலும் சாமானியனின் நோயிக்கு வேற வழி இல்லை.


ஆரூர் ரங்
ஆக 31, 2025 14:59

டிக்கெட் வாங்கும் கலாச்சாரத்துக்கும் திமுக வுக்கும் என்ன சம்பந்தம்?


Magesh Magesh
ஆக 31, 2025 13:04

சென்னை ஜி எச் மருத்துவமனையில் கேன்சருக்கு வழங்கப்படும் மாத்திரைகள் கையிருப்பு இல்லாமல் ஒரு மாத காலமாக நோயாளிகள் அவதி. ஆதாரம் நானே உள்ளேன்


Premanathan S
ஆக 31, 2025 10:55

இந்த மாதிரி ஆட்களை எதுவும் கடிக்க மாட்டேங்குதே?


Sun
ஆக 31, 2025 10:54

என்னது டிக்கெட் எடுத்து தர்றீங்களா? ஏற்கெனவேதான் நிறையப் பேர் டிக்கெட் எடுத்து போய்க்கிட்டு இருக்காங்களே? இதுல நீங்க வேற தனியா டிக்கெட் எடுத்துத் தரணுமா? ஒண்ணு ஓடுறீங்க ,இல்லன்னா டிக்கெட் எடுத்து தர்றேங்கிறீங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 31, 2025 10:26

மருந்து இல்லைன்னு சொன்னா டிக்கட் இருக்குன்னு சொல்ற நீங்க, சாதாரண சார் இல்லே சூப்பர் சார்தான்


ஆரூர் ரங்
ஆக 31, 2025 10:06

சென்னை அரசு மருத்துவமனைகளிலேயே பல அறுவை சிகிச்சைகளுக்கு வாய்ப்பு கிடைக்க 2 மாதங்கள் ஆகிறதாம். அதிலும் இருதய ஆப்பரேஷன் என்றால் அவ்வளவுதான்.


நிக்கோல்தாம்சன்
ஆக 31, 2025 10:00

... கடிகளுக்கு என்ன மருந்து சார்


David DS
ஆக 31, 2025 09:46

இந்தக் கேள்விக்கு இது பதில் இல்லையே. மருந்து இல்லைன்னா மருந்து ஸ்டாக் வைக்கணும், அதை விட்டுட்டு பிளைட் டிக்கெட் போட்டு தர்றேன்னு ஒளரக் கூடாது


Rajasekar Jayaraman
ஆக 31, 2025 08:04

இவர்களின் அரசியல் முதலீடு பொய் மட்டுமே இந்த ஜென்மங்கள் என்று திருந்துமோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை