உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான கட்டணம் இரு மடங்கு விர்ர்..! பயணிகள் "ஷாக்"; திடீர் உயர்வுக்கு காரணம் இதுதான்!

விமான கட்டணம் இரு மடங்கு விர்ர்..! பயணிகள் "ஷாக்"; திடீர் உயர்வுக்கு காரணம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக, சென்னை டூ தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ,4,301ல் இருந்து ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.4,063ல் இருந்து ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றும், நாளையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15) மற்றும் சனி(ஆகஸ்ட் 17), ஞாயிறு(ஆகஸ்ட் 18) விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் விமான கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. * சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301-ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.* சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,063ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் கட்டணம் ரூ.11,716ஆக அதிகரித்துள்ளது.* அதேபோல் கோவைக்கு விமான கட்டணம் 5,349 ரூபாயாகவும், திருச்சிக்கு 7ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.உள்நாட்டு விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக டில்லி, மும்பை, ஆமதாபாத் செல்லும் விமானங்களில் முதல் வகுப்பு கட்டணம் 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

anonymous
ஆக 14, 2024 20:35

சுடாலினை வேண்டுவது: தங்கள் குடும்ப விமான நிறுவனத்தில் நேர்மையான விலையில் பயணசீட்டு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.


Gokul Krishnan
ஆக 14, 2024 15:48

விமானம் கட்டணம் மட்டுமே தனியார் ஆம்னி பஸ் கட்டணம் இதற்கு போட்டியாக கொள்ளை சென்னை டு மதுரை திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்ல மிக அதிக கொள்ளை


subramanian
ஆக 14, 2024 15:10

எவ்வளவு நாள் முன்கூட்டியே பதிவு செய்கிறீர்களோ அவ்வளவு விலை குறையும்.


Nellai Ravi
ஆக 14, 2024 12:11

எப்போதுமே, பீக் சமயத்தில், கட்டணம் கூட தான் இருக்கும். இது உலக நடைமுறை...


Swaminathan L
ஆக 14, 2024 12:08

விமானப் போக்குவரத்து என்பது ஹை-ப்ரீமியம் வகையைச் சார்ந்தது. போட்ட காசை எடுக்க வேண்டுமானால் டைனமிக் ப்ரைசிங், டைனமைட் டேரிஃப் என்று காற்றுள்ள போதே தூற்றினால் தான் முடியும். எனிவே, இது மேல்தட்டு மக்கள் விஷயம். மற்றவருக்கு லேசான வியப்பும் தரும் செய்தி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 14, 2024 13:46

மேல்தட்டு விஷயம் என்பதெல்லாம் அந்தக்காலம் ... இன்று நடுத்தர மக்களும் அவசரத்துக்காக விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது .......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை