உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகள் திறப்பால் விமான கட்டணம் உயர்வு

பள்ளிகள் திறப்பால் விமான கட்டணம் உயர்வு

சென்னை : கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ரயில் மற்றும் பஸ்களில் இடம் கிடைக்காததால், பலரும் கடைசி நேரத்தில், விமானங்களை தேர்வு செய்து சென்னை திரும்புகின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் நேற்று காலை முதல் பயணியர் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மதுரை, துாத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளதால், அந்த வழித்தடங்களுக்கான விமான கட்டணம், சாதாரண நாட்களை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த வாரம் வரை, குறைந்த கட்டணத்தில் கிடைத்த டிக்கெட்டுகள், தற்போது ஆயிரக்கணக்கில் அதிகரித்திருப்பது பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, பள்ளி திறப்பை ஒட்டி, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டண விபரம்

வழித்தடம் -- சாதாரண கட்டணம் - நேற்றைய கட்டணம், ரூபாயில் மதுரை - சென்னை - 4,542 - 18,127துாத்துக்குடி - சென்னை - 4,214 - 17,401திருச்சி - சென்னை - 2,334 - 9,164கோவை - சென்னை - 3,350 - 6,475

கட்டண விபரம்

வழித்தடம் -- சாதாரண கட்டணம் - நேற்றைய கட்டணம், ரூபாயில் மதுரை - சென்னை - 4,542 - 18,127துாத்துக்குடி - சென்னை - 4,214 - 17,401திருச்சி - சென்னை - 2,334 - 9,164கோவை - சென்னை - 3,350 - 6,475


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
ஜூன் 03, 2025 09:55

தமிழ் நாட்டில் தரமில்லாத கல்வி படிக்க ஏரோப்ளேன்ல வாராய்ங்களா...??? கார பகோடா தின்ன கணக்கா எரியுதே...??? ஆனாலும் என்னா வில்லத்தனம்... விமான கட்டணங்களை உயர்த்தியது உசிலம்பட்டி அருகே தூத்துக்குடி பண்ணையார் மாதிரியும் அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நியூஸ்... ஆனால் பஸ் காரணுவ அதிகம் வாங்கினால் மாநில அரசு ஆக்சன் எடுக்கலன்னு போடுறதும்... ஸ்ஸ்ஸ்யப்பா... நல்லவேளை... மற்ற நேர்மையான ஊடகங்களும் இன்னும் இருக்கறதால... தப்பிச்சோம்


Anantharaman
ஜூன் 03, 2025 09:50

மத்திய அரசு தூங்குகிறதா? விமான கம்பெனிகள் இஷ்டப்படி டிக்கெட் விலை உயர்த்துவதும், லக்கேஜ் எடை குறைப்பதும் ஐடியாவும் என்று தெரிந்தும் கூட காணாதது போல் இருப்பது அவர்களின் கள்ளத்தனம் உறுதியாகிறது.


அப்பாவி
ஜூன் 03, 2025 09:31

ஆஹா... புள்ளிங்கோ விமானத்துல போய் படிக்கிது. அமெரிக்கா ரேஞ்சுக்கு முன்னேறிட்டோம்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 03, 2025 07:35

இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு


Priyan Vadanad
ஜூன் 03, 2025 08:10

நம்புற மாதிரி செய்தி வரும்போது என்ன செய்ய முடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை