உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்ப

சென்னை: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfpzve1r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nagarajan D
ஜூலை 03, 2025 09:47

வழக்கை நீர்த்து போகவைத்து விடுவார்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 09:32

மிசா சார் நிறைய நிறைய சாரி சொல்ல வேண்டியிருக்கும். பழைய 24 லாக்கப் கொலை பாக்கி வேறு.


Vaduvooraan
ஜூலை 03, 2025 08:53

திமுகவின் மரபணுவில் பதிந்துள்ள பல விஷயங்களின் ஒரு சில அம்சங்கள் வன்முறையும் அராஜகமும் படம் எடுத்தவருக்கு பரமவீர் சக்ர விருதுடன் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்


karupanasamy
ஜூலை 03, 2025 08:34

அதெல்லாம் அப்பா, சின்னவரு மற்றும் சின்ன சின்னவரு ஆளுங்க பாத்துப்பாங்கன்னு போலீசுக்கு தெரியும் நீங்க பேசாம புதுச்சேரிக்கு தப்பிச்ச போயிடுங்க


Padmasridharan
ஜூலை 03, 2025 08:22

வீடியோ எடுத்தவருக்கு வாழ்த்துகள். தைர்யமான இவருக்கு காவல்துறையில் வேலை கொடுக்கலாம். கரை படிந்த காவலர்களின் செயல்களால் மானத்தை இழந்த மக்கள் எவ்வளவோ பேர் உயிரோடு இருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியும். நல்லது செய்ய 4 பேர் ஒண்ணா சேர்ராங்களோ இல்லையோ அதட்டி மிரட்டியடித்து பணத்தை கொள்ளை அடிக்க இவங்க ஒண்ணா இருக்காங்க. இது தலைவலியுமில்லை, விமர்சனமுமில்லை. . உண்மை சம்பவங்கள்..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 03, 2025 08:12

தம்பி எல்லோருக்கும் விடியல் னு சொன்னது உனக்கு புரியல


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 03, 2025 08:10

ஏனுங்க இந்த வீடியோ எடுத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் கரம்சந்த் காந்தி இறந்த வழக்குல தொடர்புள்ளவர்ன்னு சொன்னாங்களே. அந்த பைலையெல்லாம் தூசி தட்டி எடுங்க சீக்கிரம்.


Manaimaran
ஜூலை 03, 2025 07:48

ஞாயமான கோரிக்கை ஆனால் பாதுகாப்பு? தற்காப்பில் கவனமாக இரு


Sankar Ramu
ஜூலை 03, 2025 07:29

தம்பி உங்களுக்கு மிக்க நன்றி. திராவிட கும்பல் உங்களை விடாது. கவனமாக இருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை