உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில், இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலை மற்றும் அஜித் குமார் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 28ல் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் இன்று (ஜூலை 19) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று மதுரையில் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, பிரவீன், உள்ளிட்டோர் இடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று ( ஜூலை 19) திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில், 5 கார்களில் வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு விசாரணை நடத்தியது.அஜித் குமாரின் தம்பி நவீன்குமார், வினோத் , பிரவீன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். அஜித்குமாரின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அஜித் குமாரை போலீசார் உணவு வாங்கி கொடுக்க அழைத்து சென்ற இடம் மற்றும் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருப்பம்

இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் பதிவெண் பற்றி சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2 போலி நம்பர் பிளேட் இருந்தது தெரியவந்துள்ளது. TN01G0491 என்ற பதிவெண்ணுக்கு பதில், TN 63 G 0491 என்ற பதிவெண் கொண்ட ஸ்டிக்கர் பயன்படுத்தி உள்ளனர். அஜித்குமாரை அழைத்துச் சென்ற டெம்போ வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

PATTALI
ஜூலை 19, 2025 20:07

தன்னைவிட வலிமை குறைவானவனை ஒருவன் ஏமாற்றினால், அவனைவிட வலிமையானவனிடம் கண்டிப்பாக ஒருநாள் அவன் ஏமாறுவன், காலதாமதம் வேண்டுமென்றால் ஆகலாம்.


s.jayashankar jayasankar jaya
ஜூலை 19, 2025 19:33

அப்போ போலி போலீஸ் வாகனத்திலேயே சீட்டு கட்டு மது பாட்டில் என சகல வசதியோடு இருந்து இருக்காங்க பரவால்ல இன்னும் என்னவெல்லாம் சிக்க போதோ தெரியல பார்ப்போம் பொறுத்திருந்து


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 18:37

சாட்சி சொல்ல ஆள் வராது?.


Apposthalan samlin
ஜூலை 19, 2025 17:55

முதலில் 10 பவுன் நகையை கண்டு பிடிங்க உண்மையா பொய்யா தெரிய வில்லை


என்றும் இந்தியன்
ஜூலை 19, 2025 17:39

அஜித் குமார் இறந்தது எங்கே??? எதனால்???வீதியில் செல்லும் பிச்சைக்காரனுக்கு கூட அதன் காரணம் தெரியும்??? போலீஸ் விசாரணையும்??? அவன் வீட்டுக்கு போவார்களாம் ஆட்டோ டிரைவரை கேள்வி கேட்பார்களாம் ....................... ஏண்டா இந்த டப்பா அடித்தல் ஓயவே ஓயாதா???ரிப்போர்ட் இப்படி இருக்கும்???அவன் உடலிலிருந்து ஆத்மா பிரிந்தது அதற்கு போலீஸ் எப்படி காரணம் ஆக முடியும் அந்த உடலை பிடிக்கவில்லை அதனால் ஆத்மா பிரிந்தது வெறும் அடித்ததினால் அல்ல என்று ரிப்போர்ட் இருக்கும்


Manaimaran
ஜூலை 19, 2025 17:11

என்ன பன்ன போறானுக ஒன்னும் நடக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை