உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமார் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு

அஜித்குமார் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qwjrow3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, போலீஸ் தனிப்படை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரிலும், தனிப்படை என்ற பெயரில் போலீசார், அந்தந்த உயர் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுவது வழக்கம்.இந்த போலீசார் அனைவரும், வெவ்வேறு ஸ்டேஷன்களில் பணிப்பட்டியலில் இருந்தாலும், அவர்கள் உயர் அதிகாரிகளின் கூடவே இருந்து, அவர்கள் கூறும் செயல்களை மட்டுமே செய்வது வாடிக்கை. சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பதற்காகவே, தங்களுக்கு நெருக்கமான போலீசாரை, இந்த தனிப்படைகளில் உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர்.இத்தகைய தனிப்படை போலீசார், நாளடைவில் தாங்களாகவே முன்னின்று சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதும் வழக்கம். எனினும், அவர்கள் உயர் அதிகாரிகளின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.இலை மறைவு காய் மறைவாக இருந்த இத்தகைய தனிப்படையினர் அத்துமீறல், சிவகங்கை அஜித் குமார் மரணத்துக்கு பிறகு, வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை உணர்ந்த தமிழக டி.ஜி.பி., உடனடியாக தனிப்படைகளை கலைக்கும்படி அந்தந்த உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.குற்றச் செயல்கள் நடக்கும்போது, அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நோட்டீஸ் கொடுத்து தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

rama adhavan
ஜூலை 02, 2025 22:26

போலீசுகுக்கு ஏன் வெளிநாட்டில் உள்ளது போல் உடல் மைக், உடல் கேமராவை கட்டாயம் ஆக்கக்கூடாது. அதிலும் தற்போதைய ஆட்சியில் தமிழக போலீஸ் அராஜகத்தின் மொத்த உருவம்.


Ganesh
ஜூலை 02, 2025 20:43

இந்த விஷயம் மட்டும் அல்ல... DMK அரசு எப்போது அமைந்தாலும் அரசு ஊழியர்கள் மேல் எந்த கண்ட்ரோலும் கிடையாது... முன்பொருமுறை அரசு பேருந்து ஓட்டுநரை ஒரு ஆட்டோ டிரைவர் அடித்து விட்டார் என்று எல்லா பஸ் ஓட்டுநர்கள் & நடத்துனர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்... அன்று எத்தனை பேர் சென்னையில் நடந்து வீட்டிற்கு போனார்கள் இது நடந்தது கலைஞர் ஆட்சியில் .... அன்று அப்படி நடந்தவனில் நானும் ஒருவன்.... அன்றிலிருந்து இன்று வரை கண்டிப்பாக ஒட்டு போட போகிறேன் இவர்களுக்கு எதிராக வாக்களிக்க மட்டுமே...


தமிழ்வேள்
ஜூலை 02, 2025 20:28

மாநில அரசுக்கு போலீஸ் அதிகாரம் தேவையில்லை... மாநில போலீஸ் மத்திய உள்துறை யின் நேரடி அதிகாரத்தின் கீழ் வரவேண்டும்.... அவர்கள் மாநில அளவில் கவர்னருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் ஆக இருக்க வேண்டும்... இன்ஸ்பெக்டர் ரேங்க் லிருந்து மேலுள்ள போலீஸ் அதிகாரிகள் பாரத மாநிலங்களுக்கிடையே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட வேண்டும்...சிறைகள் கோர்ட்டின் அதிகாரத்தின் கீழ் வரவேண்டும்....வழக்கு நடத்தும் அமைப்பு தனிப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும்.. இல்லை என்றால் போலீஸ் அத்துமீறல் அராஜகம் தவிர்க்க முடியாமல் போகும்..


Mahendran Puru
ஜூலை 03, 2025 09:49

நமக்கு பிரிட்டிஷ் காரனுக்கு அடிமையாக இருந்த ரத்தம். அதனால எல்லாமே மய்ய அரசிடமே இருக்கட்டும்.


Nagarajan S
ஜூலை 02, 2025 20:16

தமிழ்நாட்டில் மனித உரிமை ஆணையம் இருக்கிறதா,


Matt P
ஜூலை 02, 2025 18:25

சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பதற்காகவே, தங்களுக்கு நெருக்கமான போலீசாரை, இந்த தனிப்படைகளில் உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர்....இந்த மாதிரி அநியாயங்கள் நடப்பதற்கு காட்டுமிராண்டியாகவே இருந்துட்டு போயிருக்கலாம். இப்போ கலைச்சுட்டாங்க. இதுவரைக்கு ஏன் தெரிஞ்சும் வைச்சுக்கிட்டு இருந்தாங்க? ...


KRISHNAVEL
ஜூலை 02, 2025 16:33

இந்த அரசு மட்டுமல்ல எந்த இந்திய மாநில அரசுகளின் காவல்துறையையும் நீதித்துறையையும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அணுகவே பயப்படவேண்டியுள்ளது , அவர்கள் எல்லாம் அதிகார வர்க்கத்திற்கும் ,பணக்காரவர்கத்திற்கும் சாதகமாக நடப்பவர்கள்தான்


மோகன்
ஜூலை 02, 2025 16:30

தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், கண்ணதாசன் இப்போது என்ன செய்கிறார். மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாரோ.


பெரிய குத்தூசி
ஜூலை 02, 2025 16:03

இந்த டிஜிபி திமுக குடும்பத்தின் பெரிய சொம்பு. இந்த சொம்பு சங்கர் ஜிவால் நம் காங்கிரஸ் முன்னாள் டம்மி பிரதமர் மன்மோகன் சிங் மாதிரி. சங்கர் ஜிவால் சும்மா இருப்பாப்ல. திமுக வோட வார் ரூம் ல உக்காந்துகிட்டு தமிழக காவல்துறை எப்படி operate பண்ணனுமுனு ஆர்டர் பன்ற திரை மறைவு டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் சோனியா காந்தி மாதிரி.


karruppiah sivakumar, Singapore
ஜூலை 02, 2025 15:40

காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் எத்தனை உயிர்கள் பலி கொடுப்பது. லஞ்சம், பண பலம், ஆட்சி அதிகாரம் கொண்ட ஒரு ரவுடி கும்பலாக செயல்பாடு வந்துள்ளது. இனியும் காவல் துறை நமக்கு காவல் இருக்கும் என்பது ஒரு எட்டா கனியே. களைத்திட வேண்டும்.


Naga Subramanian
ஜூலை 02, 2025 15:23

தனிப்படையை கொலைப்படை என்றாகிவிட்டது.


சமீபத்திய செய்தி