உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் சாலையில் கிடந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி; போலீசார் ஷாக்

சென்னையில் சாலையில் கிடந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி; போலீசார் ஷாக்

சென்னை; சென்னையில் சாலையில் ஏ.கே., 47 துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னை ராமாபுரத்தில் பிரபல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள சிக்னல் அருகே சாலையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், 30 தோட்டாக்களும் கிடந்துள்ளது. இதை கண்ட சிவராஜ் என்பவர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளார். ஏகே 47 ரக துப்பாக்கி எப்படி வந்தது, யாராவது வீசிச் சென்றனரா, ஏதேனும் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா உள்ளிட்ட விவரங்களுக்காக அதன் உண்மைத்தன்மை குறித்து தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பி இருக்கின்றனர்.துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சாலையில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sundram
பிப் 05, 2025 14:44

அது சினிமா ஷூட்டிங் துப்பாக்கி போலி குண்டுகள் எல்லாம் போலி என்று கூறி கேஸ் ஐ மூடி இடுவார்கள் இது அசல் இல்லை போலி தான்


venugopal s
பிப் 04, 2025 22:49

இந்த செய்தி நம்பும் படி இல்லையே!


Murugesan
பிப் 04, 2025 21:57

கேடுகெட்ட காவல்துறை திமுக தீவிரவாதிகளின் கூட்டாளிகள்


Bhakt
பிப் 04, 2025 21:54

"அது சும்மா டம்மி ...ஒரு தனியார் தொலைக்காட்சி பிராங்க் செய்ய ரோட்ல வச்சாங்க" ...அப்படின்னு நாளைக்கு காதில் பூ சுத்தப்படலாம்.


Ganapathy
பிப் 04, 2025 15:38

இருங்க இருங்க இரும்புக்கை இப்பதான் முதுகை சொறிஞ்சுகிட்டுறுக்கு...


ram
பிப் 04, 2025 13:49

சென்னை கமிஷனர் mind வாய்ஸ், இதுக்கு என்ன கதை சொல்லலாம் என்று


xyzabc
பிப் 04, 2025 12:52

யாரோ சொன்னாங்களே தமிழகம் அமைதி பூங்கா என்று. உளறல்


Barakat Ali
பிப் 04, 2025 12:11

இரும்புக்கை மாயாவியின் தலைமையில் சட்டத்தின் ஆட்சி நடக்குது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை