உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 3 முறை விலை உயர்வை கண்ட ஆபரண தங்கம்

ஒரே நாளில் 3 முறை விலை உயர்வை கண்ட ஆபரண தங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அக் ஷய திருதியையான இன்று(மே 10) , சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 2வது முறையாக உயர்ந்துள்ளது. முதலில், காலையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280க்கு விற்பனை ஆனது. காலை 8:30 மணிக்கு 2வது முறையாக சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ரூ. 53, 640க்கு விற்பனை ஆனது. மதியம் 3 மணிக்கு மேல் 3வது முறையாக தங்கத்தின் விலை 3வது முறையாக ரூ.520 உயர்வை சந்தித்து 54,160 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அக் ஷய திருதியை துவங்கிய நிலையில், இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்வு கண்டுள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. இப்போது 2வது முறையாக ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, 53,640 ஆக விற்பனை ஆனது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதியம் 3 மணியளவில் 3வது முறையாக ரூ.520 உயர்வை சந்தித்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,160 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 6,770 ரூபாய் ஆகவும் விற்பனை ஆனது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை, ரூ.1.30 உயர்ந்து, ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suresh Kesavan
மே 10, 2024 20:26

அக்ஷய திரிதியை வியாபாரம் நகை கடைக்காரர்களால் நடத்தப்படும் ஒரு மோசடி மக்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்


Mohan
மே 10, 2024 17:42

இப்பொழுது என்க்கு தெரிந்த வரை தங்கம் வரதட்சிணை தரவேண்டும் என நடுத்தர மக்கள் கேட்பது நின்றூவிட்டது மாறாக பெண்ணின் தகப்பனாரின் ஈகோவை குறி வைத்து உங்கள் பெண்ணுக்கு நீங்க செய்யுங்க தாலி நாங்க வாங்கறோம் சாப்ட் பிரஷர் ஆகவே செய்யலைன்னா மானம் போகும் செஞ்சா காசு போகும் என்னதான் செய்ய?


RAJ
மே 10, 2024 13:00

இந்திய மக்கள் இந்த மெட்டால நிராகரித்தால், தங்கம் கிராம் க்கு கிடைக்கும்


Navaneethan
மே 10, 2024 07:59

தொடர்ந்து விலை அதிகரித்து வருகிற தங்கத்தின் விலை வரும் வாரங்களில் சற்று இறங்கினால் என் போன்ற நடுத்தர வர்க்க திருமண தேவையாளர்களுக்கு நல்லது ?


sivaguru
மே 10, 2024 13:06

வரதட்சணை என்று வெளிப்படையாக கூறலாமே ஏன் தயக்கம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ