உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்

மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்

திண்டிவனம்: ''மதவாத கட்சியான பா.ஜ., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க., ஆகிய கட்சிகள், வி.சி., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அது அவருடைய கருத்து; ஆனால், அவருக்கெல்லாம் முன்பாகவே பா.ம.க., தான் தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மது ஒழிப்பு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பா.ம.க.,தான். கடந்த 44 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு வேண்டி பா.ம.க., போராடி வருகின்றது. கடந்த 35 ஆண்டுகளில் 32 மாவட்டங்களில் மதுவை ஒழிக்கும் வகையில் மகளிர் மாநாட்டை நடத்தியுள்ளோம். இதில் அனைத்து சமுதாய தவைர்களை அழைத்தோம். முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து, மது ஒழிப்பை அமல்படுத்த கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் டாஸ்மாக் துவக்கி, 7,200 கடைகள் திறக்கப்பட்டன. அவற்றை 6,800 கடைகளாகக் குறைத்த பெருமை பா.ம.க.,வை சேரும். உச்ச நீதிமன்றம் வரை போராடி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 3321 மதுக்கடைகளை மூட வைத்தது பா.ம.க.,தான். டாஸ்மாக் நேரம் காலை 8.00 முதல் இரவு 12.00 மணி வரை 16 மணி நேரமாக இருந்ததை, 10 மணி நேரமாகக் குறைத்ததும் பா.ம.க.,தான்.கடந்த 2016ல், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்த பின்னரே, தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் அதை அறிவித்தன. இவ்வாறு அவர் கூறினார்.

நிதிக்காக தமிழக அரசு வழக்கு போட வேண்டும்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடி நிதியை, இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை திறக்கவும், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதற்கு தமிழக அரசு மறுத்து வருகின்றது. இதற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தியது சரியல்ல. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிதியை பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சீன பூண்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி தற்போது விற்பனை செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
செப் 13, 2024 20:35

ஓய் வைத்தியரே.....தில் இருந்தால்....பாமக காரன் எவனும் குடிக்க கூடாது...மீறி குடித்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கடி கொடுப்பேன்... என்று சொல்லுமேன் பார்ப்போம்.. அப்புறம் பாமகவில் பெரிய/ சின்ன அய்யாக்கள் தவிர யாரும் இருக்கமாட்டார்கள்.....


KRISHNAN R
செப் 13, 2024 10:15

இப்படித்தான்.. பல பேர்.. பேசி. காட்டு கருவை, மது விலக்கு,,, இன்ன பிற பேசி அவ்வப்போது.. நடக்கும்....மாட்டு... பேரம்.... தான் . ஜி எஸ் டி..... என்ற குழப்பமும் அதில் உண்டு....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2024 07:22

மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பாமகதான் .... ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக பலமுறை இரு கழகங்களுடன் உறவு வைத்தேன் ..... முழு மதுவிலக்கு கொண்டுவர்றதா எழுதிக் கொடுத்தாதான் கூட்டணி ன்னு யாரு கிட்டயும் சொன்னதில்லை ன்னா பாத்துக்குங்க .....


Ms Mahadevan Mahadevan
செப் 13, 2024 06:20

பிஜேபி பா ம க மட்டும்தான் மத வாத ஜாதி கட்சி என்று இல்லை வி சி க ஜாதி கட்சி, தி மு க மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும் மத வாத கட்சிகள்தான் ஹிந்து மதத்தை தவிர்த்து பிற மத வாதம்


Mani . V
செப் 13, 2024 05:58

அப்புடியா? சொல்லவேயில்லை. ஆமா உங்க கட்சி அடியாட்கள் ஸாரி தொண்டர்கள் யாருமே குடிப்பதில்லையா?


Krishna R
செப் 13, 2024 05:51

தலித் ஒட்டுக்களை படமாக்கும் விசி சாதி கட்சி இல்லையா


ராஜவேல்,வத்தலக்குண்டு
செப் 13, 2024 07:05

மருத்துவர் ராமதாஸ் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு தமிழக மக்கள் மாங்கா மடையர்கள் அல்ல!


Kasimani Baskaran
செப் 13, 2024 05:24

மது தயாரித்து தமிழக அரசிடம் கொள்ளை லாபத்தில் விற்போரிடம் பெட்டி வாங்க இவர் உபயோகப்படுத்தும் ஒரு எளிய தொழில் நுணுக்கம்தான் இந்த தகுதி என்று சொல்லப்படும் பட்டய உரிமை.


புதிய வீடியோ