உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்

பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(மே 19) ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமைச் செயலகத்தில்காலை 11 மணிக்கு நடந்த கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

உஷாராக இருங்கள்!

மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது திடீர் வெள்ளம் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும்.

பருவமழை

மழைக்காலத்திற்கு தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலோர மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
மே 20, 2025 06:46

அவ்வளவுதான் திமுக அரசு தமிழகத்தை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விட்டது. இந்த மாதிரி டூபாகூர் வெத்து வேட்டு வாய்ச்சவடால் அரசியல் தான் செய்கிறார்கள்.


VASUDEVAN
மே 19, 2025 17:23

ஏற்கனவே பெய்த சிறு தூறலுக்கு நாறிக்கொண்டு இருக்கிறது பர்ரிஸ் 4000 கோடி ampo


Murthy
மே 19, 2025 15:08

சாராயம் விற்பது மட்டுமே ஆட்சியாளர்கள் வேலை


GMM
மே 19, 2025 13:55

பருவ மழை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள், மின் வாரியம், போலீஸ், தீ அணைப்பு, பொதுப்பணி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் போன்றவை முன்கள பணியாளர்கள். இவர்களுக்கு தான் இடர் கால அதிக நிதி தேவை. கலெக்டர் மந்திரியுடன் சேர்ந்து அரிசி, பருப்பு போன்ற நிவாரண உதவி வழங்க வேண்டும்? 10 பேருக்கு நிவாரணம் வழங்கி 10 லட்சம் பேர்கள் போல் சந்தோஷம் அடைய விளம்பரம் செய்ய கலெக்டர் தயார். தயார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 19, 2025 13:51

கலெக்டர்களிடம் பேசவேண்டியதை எழுதிக்கொடுத்தது யாரு ??


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 19, 2025 13:42

ஆமா, ஓடைஞ்ச குடை, ஓட்டை பக்கட் அப்பறம் மழை காகிதம் கிராம வழக்கில் சொல்லும் வார்த்தை, இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விஞ்சாணி செல்லூர் ராசு வை உடனே தொடர்பு கொள்ளவும்....


திருட்டு திராவிடன்
மே 19, 2025 13:18

அதி புத்திசாலி கூறிவிட்டார் எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள்.


Ganapathy
மே 19, 2025 12:26

அப்படியே இந்த வருஷம் ஒரு 10,000 கோடி சென்னைல தூர்வருன கணக்குல போட்டுக்க. ஏன்னா இனிமே நீங்களும் உங்க திராவிடிய கழகம் ஆட்சிக்கு வர முடியாது.


Ramesh Sargam
மே 19, 2025 12:21

பருவமழை பெய்து மாநிலம் நாசமான பிறகு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க நான் தயாராக உள்ளேன்.


Narayanan
மே 19, 2025 12:06

வேகமாக நிதி ஒதுக்குங்கள். தேர்தல் சிலவுக்கு நன்றாக இருக்கும் .


முக்கிய வீடியோ