உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வித்தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் ரத்து: அண்ணாமலை

கல்வித்தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் ரத்து: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கல்வியின் தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஆல் பாஸ் திட்டம் ரத்து குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவே மத்திய அரசு ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4lc3hb55&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் பின் தங்கி உள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது. 5ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. 10ம் வகுப்பு மாணவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையில் அமர வைத்தேன். பாஸ் செய்ய வைத்தேன். பத்தாம் வகுப்பு வரை அனுப்பி வைத்தேன். இதை சொல்வது பெருமையாக இருந்தாலும், அது 1980களில் தேவைப்பட்டது. 2024ல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும். அடிப்படையாக படிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.மாநில அரசு ஆல் பாஸ் முறையை நடைமுறைபடுத்தவில்லை என்றால் நடைமுறைபடுத்தாமல் இருக்கலாம். மத்திய அரசை பொறுத்தவரை ஒரு காரணத்திற்காக கொண்டு வந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தாய்மொழி, ஆங்கிலம், கணக்கு அறிவியல் கற்றலில் பிரச்னை உள்ளது.இதற்கு அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு பணம் குறைவாக கொடுத்தார்கள். அதனால், இண்டர்நெட் பில் கட்டவில்லை.வரி அதிகம் கொடுத்தோம். அதனை குறைவாக திருப்பித் தருகிறார்கள் என கதை சொல்கிறார்கள்.இண்டர்நெட் பில் கட்டாமல் இருந்திருந்தால், இன்று உண்டியல் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்து இருந்தோம்.பா.ஜ., அலுவலக கட்டட திறப்பு விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். தேதி இன்னும் முடிவாகவில்லை. விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜைக்கு அழைப்பு விடுத்தனர். கட்டாயம் நாங்கள் கலந்து கொள்கிறோம்.பிரதமர் மோடி - எம்ஜிஆர் ஓப்பீடு குறித்து எனது கருத்து தொடர்பாக அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர். வாட்ஸ் அப் - செயலியில் செய்தி அனுப்பினர். இந்த ஒப்பீடு சரியானது என்கின்றனர். எம்.ஜி.ஆர்., பாரதத்தின் ரத்னா. அ.தி.மு.க.,வின் ரத்னா கிடையாது. அவர் குறித்து பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியா சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜோதிமணி எனக்கு உறவினர்கள் தான். ஒரே கோவிலுக்கு செல்கிறவர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

J.Isaac
டிச 25, 2024 17:10

அதிகம் பாதிக்கப்படுவது இந்து மதத்தை சேர்ந்த கிராம நகர நடுத்தர மற்றும் பட்டியலின மக்கள் தான். கல்வியின் வியாபாரத்தரம் மட்டுமே உயரும்


J.Isaac
டிச 25, 2024 14:38

அறிவு பெருத்துவர்கள் நிறைய பேர் குப்பைகளை ஒழுக்கமாக குப்பைத்தொட்டியில் போடுவதில்லை. டி மார்ட் சென்றால் பொருட்களை கையாளுவதில் ஒழுக்கம் கிடையாது.வாகனங்கள் ஓட்டுவதில் ஒழுக்கம் கிடையாது


hari
டிச 25, 2024 14:58

ஆமாம் ஆமாம் டாஸ்மாக்கில் கூட பாட்டிலை அப்படியே போடுறாங்க. ஆம்லெட், பொடிமாஸ் கூட நல்ல இல்லை. அப்புறம் என்ன


Priyan Vadanad
டிச 24, 2024 22:15

பிட்டு பிட்டாய் உண்மையை பிரித்து மேய்ந்தால் எப்படி சார் விளங்கும்? வழக்கப்படி ,பக்கம் பக்கமாக முழு செய்தியையும் பிரசுரிக்கலாமே


ghee
டிச 25, 2024 06:52

போட்டாலும் உனக்கு அப்படியே புறிஞ்சிருமாகும்


Jay
டிச 24, 2024 20:16

தரத்தை மேம்படுத்தி அறிவாளி ஆகி விட்டால் மன்னராட்சி நடத்துவதில் சிக்கல் வரும். ஆக... குடும்பத்துக்கு விரோதமான எந்த திட்டத்தையும் தமிழனுக்கு எவ்வளவு பலன் கிடைத்தாலும் நடைமுறை படுத்த முடியாது.


திகழ்ஓவியன்
டிச 24, 2024 20:11

அண்ணாமலை அவர்கள் இந்த தேர்வு நிலை இருந்து இருந்தால் IPS ஆகி இருக்கமாட்டார் .


hari
டிச 24, 2024 22:04

அமெரிக்காவில் இருந்து பலரை நாடு கடத்த போறாங்களாம்........உங்க நிலமை எப்படி திகழ்


vujai
டிச 24, 2024 23:00

jalara


vijai
டிச 24, 2024 23:10

திகழ் பெயரை மாற்றவும்


திகழ்ஓவியன்
டிச 24, 2024 20:05

ஓசி நீ இந்த மாதிரி பாஸ் இல்லை என்று அன்று வந்து இருந்தா நீ IPS ஆகி இறுக்கமாட்ட ஆடு மேய்த்து கொண்டு இருந்து இருப்ப , ஆள் பாஸ் upto 8 என்பதால் தான் நீ IPS மறவாதே


Kasimani Baskaran
டிச 24, 2024 19:43

அறிவில்லாதவனை வைத்துதானே பகுத்தறிவு சொல்லிக்கொடுக்க முடியும். ஜாதியை ஒழித்தோம், தண்ணித்தொட்டியில் மலம் கலந்தோம் என்றெல்லாம் சமூக நீதி பேசமுடியும்.


Sundar Pas
டிச 24, 2024 19:36

நானும் பாஜக தான், முதல்ல இங்கே எட்டாவது வரைக்கும் கல்விக்கூடம் செல்வதை நிறுத்தாமல் இருக்க இந்த ஆள் பாஸ் திடத்தை எதிர்க்கவேண்டாம், கொஞ்சம் ஏழை கூலி மக்களையும் நினைத்துப்பேசவும். நகரங்களில் இந்த திடத்தை ரத்து செய்யலாம்.


vijai
டிச 24, 2024 23:03

கிராமத்தில் இருக்கும் மாணவிகள் மாணவர்கள் முன்னேற வேண்டாமா


Sundar R
டிச 24, 2024 19:34

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த 8-ஆம் வகுப்பு மாணவர்களைக் கேட்டால் A, B, C, D... யின் 26 எழுத்துக்களில் 18 எழுத்துக்கள் அவர்களுக்கு ஏன் தெரியவில்லை? மத்திய அரசு 5-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வித்திறனில் குறைபாடு உள்ள மாணவர்களை ஃபெயில் செய்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் பரீட்சை வைத்து அதில் பாஸ் ஆனால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். இதனால் ஃபெயில் ஆன மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகாது. இது அந்த மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும். அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது மட்டும் சரியான நோக்கமாக ஆகாது. அனைத்து மக்களும் கல்வியில் சிறந்த அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும் என்பது தான் சிறந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையானவற்றை அரசு மக்களுக்குச் செய்து தர வேண்டும். கழுநீர் பானையை மாட்டுக்கு வைப்பதற்கு பதில் ஆட்டுக்கு வைத்தால் ஆட்சியாளர்களின் கல்வியறிவு குறித்து மக்களுக்கு டவுட் வரும். Government should not produce rotten goods from Tamil Nadu.


chennai sivakumar
டிச 24, 2024 19:17

அப்புறம் கூட்டம் எப்படி சேர்ப்பது??