உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., உடன் கூட்டணியா: திருமாவளவன் சொல்வது இதுதான்!

அ.தி.மு.க., உடன் கூட்டணியா: திருமாவளவன் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''பா.ம.க., பா.ஜ., இருக்கும் அணியில் இருக்க மாட்டோம். பா.ஜ., உள்ளதால் அ.தி.மு.க., அணியில் சேர முடியாது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.மதுரையில் நடந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் இந்த தேர்தலில் மிக முக்கிய துருப்புச்சீட்டாக உள்ளது. தினமும் நம்மிடம் தேர்தல் குறித்து கேள்வி கேட்கின்றனர். எத்தனை சீட் கேட்க போகிறீர்கள்? கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி தி.மு.க., உடன் விரிசல் வருகிறதே? என கேட்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b6gzfbem&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆளுங்கட்சி உடன் கூட்டணி இருந்தால் விரிசல் வரத்தான் செய்யும். எதிர்க்கட்சி உடன் இருந்தால் வரப்போவது கிடையாது. ஆளுங்கட்சியுடன் கூட்டணி என வரும் போது, போலீசுடன் பிரச்னை வந்தாலும், அதிகாரிகளுடன் பிரச்னை வந்தாலும் ஆளுங்கட்சியுடன் நெருக்கடி வரத்தான் செய்யும்.அரசியல் கட்சி கொடி அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டதும், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிட்டது போன்று ஆகிவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அகற்றினர். அவ்வளவு அரசியல் காழ்ப்புணர்ச்சி, அதிகார வர்க்கத்திடம் மேலோங்கி இருக்கிறது. கட்சிக் கொடி அமைக்கும் போது எல்லாம் போலீசார் தடுப்பார்கள். ஆனால், நாங்கள் ஆளுங்கட்சி கூட்டணி தான். இதனை எதிர்கொண்டு போராடிக் கொண்டே ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்கிறோம்.ஏன் கசப்பு; சண்டை தானே. வெளியே வர வேண்டியது தானே என கேட்கிறார்கள். அரசியல் களத்தில் நாம் இருக்கும் போது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசியல், அகில இந்திய அரசியல், தமிழக மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அரசியலில் பொறுமை, சகிப்புத்தன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார் என்பதில் தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நமது எதிரிகள் யார் என்பதை முடிவு செய்வதில் ஒரு துணிவு தேவை. இதனால் தான், வெளிப்படையாக முடிவெடுத்து சொல்கிறோம். பா.ம.க., பா.ஜ., இருக்கும் அணியில் ஒரு போதும் சேர மாட்டோம் . அ.தி.மு.க.,வுடன் சேரலாம். ஆனால், பா.ஜ., உள்ளதால் சேர முடியாது. மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்காக அரசியல் வரவில்லை. 4 பேரை 5 பேர் ஆக்குவதாலும், 5 பேரை 10 பேர் ஆக்குவதாலும் புரட்சி ஏற்படப்போவதில்லை. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வளர வளர வார்த்தைகளில் கவனம் தேவை. சமூக ஊடகங்களில் பதிவு செய்யும் போது முதிர்ச்சியாக இருக்க வேண்டும். உட்கட்சி பிரச்னை பற்றி எழுதக்கூடாது.மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் அரசியல் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில், ஈ.வெ.ராமசாமி என்ன செய்தார் என கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMESH
ஜூன் 22, 2025 22:30

தெருமாவுக்கு தெரிந்து விட்டது.....ஒரு புறம் பயம்....பதவி ஆசை.... வாய்ப்பு இல்லை வரும் தேர்தலில் ...


Bhaskaran
ஜூன் 19, 2025 08:43

உனக்கு ஸ்வீட் பாக்ஸ் மட்டும் முக்கியம்


sridhar
ஜூன் 19, 2025 08:09

ஒரு நடிகன் திரைப்படத்தில் நல்லவன் வேடத்தில் நடிப்பது போல் தான் இவர் மேடைப்பேச்சு. நம்பாதீங்க .


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 07:45

ஏம்பா...... நீ என்ன தான் சொல்ல வாற..... வர வர நீயும் கமல்ஹாசன் போல.... ஒன்றும் புரியாதபடி பேச ஆரம்பித்து விட்டாய்.


SUBBU,MADURAI
ஜூன் 19, 2025 03:39

இந்த ஒட்டுண்ணிப் பயல் திருமாவளவனின் சித்து விளையாட்டுகளை திமுகவும் அதிமுகவும் நன்கு அறிந்து வைத்துள்ளன இவன் ஒருத்தரை ஒருத்தர் காரணம் காட்டி பேரம் பேசுகிறான் என்று இரண்டு கட்சிகளுக்கும் நன்றாக தெரியும். எனவே இந்த திருமாவின் பிளாக் மெயில் அரசியலை முடிவுக்கு கொண்டு வர இரண்டு பங்காளி கட்சிகளும் ஒன்று சேர்ந்து இவனை கழட்டி விட வேண்டும் அப்படி செய்தால் அரசியலில் இவன் செல்லாக் காசாகி விடுவான்.


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 01:21

திருமா திமுகக்கூட்டணியை விட்டு வெளியேறி பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவது நல்லது.


Anantharaman Srinivasan
ஜூன் 19, 2025 00:34

கட்சி வளருதோயில்லையோ மூச்சுயுள்ளவரை தான் MP யாயிருக்கணும். அது தான் குறிக்கோள். பாமக ராம்தாஸ் கூட தன் கட்சியில் இரண்டு தலித்களை மத்திய மந்திரியாக்கினார். 10.5% ஒதுக்கீட்டுக்கு இன்னமும் போராடுகிறார். திருமா.. அதுபோல் ஏதேனும் குறிக்கோளுடன் கட்சி நடத்துகிறாரா.?


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 07:56

அட நீங்க வேற... வேங்கை வயல் பற்றி வாயே திறக்கவில்லை.... இந்த லட்சணத்தில் போராட்டம் செய்ய போகிறாராம்.. தாழ்த்தப்பட்ட மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன.. நமக்கு தேவை MP பதவி... காசு..... பணம்.... துட்டு..... மணி..... மணி.


dmk dinamalar allakkai
ஜூன் 18, 2025 23:00

அதிமுக கூட்டணி உடைக்க மேலிடம் சொல்லியிருக்கு, அதுக்கு சன்மானமா இனிமே உக்காருறதுக்கு பிளாஸ்டிக் ஷேர் குடுப்பங்களாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை