உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவசியமற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு: அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

அவசியமற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு: அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதன செலவுகளை செய்யாமல், கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா ஆட்சியில், மக்கள் நலனுக்காக துவக்கப்பட்ட திட்டங்களுக்கு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, 42 மாதங்களில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அவை முழுமையாக முடிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுஉள்ளன.திட்டம் ரத்துவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து, தினமும் 60 எம்.எல்.டி., கடல்நீரை குடிநீராக்கும், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது. விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும், 235 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே, ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்பணை பணி காலதாமதமாக நடக்கிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.சேலம், தலைவாசல் கால்நடைப் பூங்கா திறக்கப்படவில்லை. தென்காசி - ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரை, கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணி, மூன்று ஆண்டுகளாக தொய்வில் உள்ளது.இப்படி விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது.அவசியமற்ற பணிகள்மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதன செலவுகளை செய்யாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை, ஸ்டாலின் அரசு செய்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயன் அளிக்காத, 'கார் ரேஸ்' நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள், மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்படுகின்றன.சென்னை முட்டுக்காட்டில், 5 லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க, அரசு 'டெண்டர்' கோரியுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள், நதி நீர் இணைப்புக்காக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தி.மு.க., அரசு அதில் கவனம் செலுத்தாமல், பன்னாட்டு அரங்கம் கட்ட முனைப்பு காட்டுவது ஏன்?உள்நாட்டு நதி நீர் இணைப்பு திட்டங்களை, 10 ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், பல மாவட்டங்கள், வறட்சியால் பாதிக்கப்படும் என, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தை பெயரை, அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டும் என்றால், அவரது அறக்கட்டளை சார்பில், அப்பணிகளை செய்யலாம். போதிய நிதி இல்லாமல், மக்கள் நலத் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான நிதியை, அரசு முழுமையாக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 09, 2024 07:21

தமிழக மக்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் திமுகவின் உற்ற பங்காளியான இந்த எடப்பாடி பழனிச்சாமி திமுக.ஆட்சியில் நடந்த கனிமவள ஊழல்கள், மணல் குவாரிகளில் நடைபெறற ஊழல்கள் பத்திரப் பதிவில் நடந்த மாபெரும் பயங்கர ஊழல்களை எல்லாம் மக்களிடம் சொல்லி திமுகவை எதிர்த்து தன் கட்சியினரை கூட்டி பொது வெளியில் போராடாமல் இப்படி உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளை எல்லாம் சொல்லி திமுகவை எதிப்பது போல் நாடகமாடிக் கொண்டு தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் அது ஏன் என்று சற்று விரிவாக பார்ப்போம். திமுக அரசு அமைந்து முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வருக்கு வைத்த முதல் கோரிக்கை: நான் முதலமைச்சராக இருந்த போது வசித்த இந்த ராசியான வீட்டையே எனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார் அது உடனே நிறைவேற்றப்பட்டது.அடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னுடைய சம்பந்தி மீதான 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு, 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்த ஊழல் வழக்கு ஸ்மார்ட் சிட்டி வழக்கு, இரண்டு லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன வழக்கு உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் கிடப்பில் போட வேண்டும் என்கிற எடப்பாடி வேண்டுகோளும் ஸ்டாலினால் நிறைவேற்றப் பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தாக எடப்பாடி மீது தொடரப்பட்ட வழக்கில் அப்படி தகவல்களை மறைப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை என அரசுத் தரப்பே நீதிமன்றத்திலே தெரிவித்து எடப்பாடியை காப்பாற்றி வருகிறது. மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் அவர்களை முதல்வரிசையில் அமர்த்துவது எனது தனிப்பட்ட உரிமை என்று சபாநாயகர் உறுதிகாட்டிய நிலையில், முதல்வர் ஸ்டாலினே எழுந்து நின்று எடப்பாடியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உடனே ஓ.பி.எஸ்ஸின் இருக்கை மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டது.திமுகவிற்கும், எடப்பாடி திமுகவுக்கும் துரைமுருகன் மூலமாக புரோக்கராக செயல்பட்டு வருகிற கே.பி.முனுசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய குவாரி உரிமங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்கப்பட்டது மேலும் இன்று வரை எடப்பாடியின் உறவினர்களின் நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட் வேலைகளை தொடர்ந்து வழங்கி பங்காளி எடப்பாடியின் கஜானா நிரம்பி வழிய திமுக அரசு உதவி வருகிறது. இப்படி தன் பங்காளியான எடப்பாடியை பாதுகாப்பதும் அவரது கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றித் தருவதும், எதற்காக என்று எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளான அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்!


Kasimani Baskaran
நவ 09, 2024 06:58

என்னதான் ஆனாலும் உடைந்து போன அதிமுகவை ஒன்று சேர்க்க இவருக்கு பங்காளிகள் அனுமதி கொடுக்கவில்லை என்பதுதான் சோகம். அண்ணாமலை வந்தவுடன் எதிர்க்கட்சி பதவியும் வேலை செய்யாது. ஆத்தா திமுகவுக்கு இப்படி ஒரு சோகமான முடிவு வந்திருக்கக் கூடாது.


Svs Yaadum oore
நவ 09, 2024 06:22

கடந்த 50 வருடங்களில் 30 வருடங்கள் மேல் ஆட்சி செய்தது மறைந்த எம்ஜிஈயர் மற்றும் அம்மா அவர்கள் ...அவர்கள் செய்த வளர்ச்சி பணிகளை வெட்கமில்லாமல் தி மு க ஸ்டிக்கர் ஒட்டி திராவிட மாடல் என்று விளம்பரம் .... அ தி மு க செய்த வளர்ச்சி பணிகள் அனைத்தும் அரசு குறிப்புக்கள் மற்றும் வலை தளங்களில் இருந்து நீக்கம் .. ..எம்ஜிஈயர் என்ன செய்தார் என்று தேடினால் எதுவும் தென்படாது ....மறைந்த அம்மா அவர்களை பற்றி விடியல் மிக மோசம் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள் ....ஆனால் இதை எல்லாம் அ தி மு க திருப்பி கேள்வி கேட்காது..... காரணம் இரெண்டு திராவிட கட்சிகளும் பங்காளிகள்தான் ....இப்போதுள்ள அ தி மு க வேறு , அம்மா காலத்திய அ தி மு க வேறு .....


Svs Yaadum oore
நவ 09, 2024 06:16

487 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க, விடியல் அரசு டெண்டர் கோரியுள்ளதாம் ...இந்த 500 கோடி ரூபாயை விடியல் அரசு கார்பொரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்க .... ..ஆனால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.....விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும், 235 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாம் ......இதுதான் விடியல் சமூக நீதி மத சார்பின்மை ....


முக்கிய வீடியோ