மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
மதுரை : கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சீட் பெற்ற மாணவருக்கு அனுமதி வழங்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முகமதுஷேக் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனு: கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் சேர கவுன்சிலிங் மூலம் 2009ல் எனக்கு அனுமதி கிடைத்தது. சபீக்ஜமால் என்பவருக்கு பதிலாக எனக்கு சீட் ஒதுக்கப்பட்டது. எனினும், எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். தனி நீதிபதி விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார். மருத்துவ கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு மீண்டும் படிக்க வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என, கோரினார். நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மருத்துவ படிப்பை தொடர இந்த கல்வியாண்டிலேயே அனுமதி வழங்க வேண்டும். பல்கலை கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என, பெஞ்ச் உத்தரவிட்டது.
8 hour(s) ago | 1
8 hour(s) ago
9 hour(s) ago