உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைந்த விலை பாரத் அரிசி, கோதுமை ரயில் நிலையங்களிலும் விற்க அனுமதி

குறைந்த விலை பாரத் அரிசி, கோதுமை ரயில் நிலையங்களிலும் விற்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசால் குறைந்த விலையில் விற்கப்படும் பாரத் அரிசி மற்றும் கோதுமையை, ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்து உள்ளது.பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவற்றை, மத்திய அரசு குறைந்த விலையில், பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்களிலும்,பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குனர் நீரஜ் சர்மா, கடந்த 15 ம் தேதி பிறப்பித்துள்ளார். விற்பனையை மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் மேற்கொள்கிறது.விளம்பரம்முதற்கட்டமாக, அரிசி, கோதுமையை, சோதனை முறையில் விற்பனை செய்ய, மூன்று மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கிலோ அரிசி 29 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 27.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி, பாரத் ஆட்டா என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.ரயில் நிலையங்களில் இவற்றை விற்பதற்கு ஏற்ற இடங்களை, அந்தந்த கோட்ட மேலாளர் ஒப்புதலுடன் தேர்வு செய்ய வேண்டும், விற்பனை செய்ய வரும் வேன்களில் மட்டுமே விளம்பர பேனருக்கு அனுமதி தர வேண்டும்; விற்பனைக்கு மைக் செட் விளம்பரம் செய்ய அனுமதியில்லை போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த அரிசி, கோதுமை விற்பனைக்காக எந்த கட்டணமோ, விற்பனை வேன் நிறுத்துவதற்காக வழக்கமான பார்க்கிங் கட்டணமோ ரயில்வே துறை வசூலிக்காது என்றும், அந்த உத்தரவில் ரயில்வே வாரியம் கூறப்பட்டுள்ளது.பயணியர் நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களை தவிர்த்து, மற்ற ரயில் நிலையங்களின் நுழைவாயில் பகுதிகளில் வேன்களை நிறுத்தி விற்பனை செய்யப்பட உள்ளது.மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம், ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதியில் இந்த விற்பனை நடைபெறும். ரயில் பயணியர் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.வரவேற்புஇதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்ட்ரல், எழும்பூர் போன்ற பயணியர் நெரிசல் மிக்க ரயில் நிலையங்களை தவிர மற்ற ரயில் நிலையங்களில், பாரத் அரிசி, கோதுமை மாவு போன்றவற்றை, மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் சார்பில் விற்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.'எந்தெந்த ரயில் நிலையங்களில் விற்பனை என்பது, இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றனர்.டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ''பெரிய நகரங்களில் அதிக பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில், இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும். இந்த விற்பனை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
மார் 24, 2024 07:30

எல்லாம் தேர்தல் செய்யும் மாயம் எந்த விதத்தில் மக்களை ஏமாற்றி வாக்குகள் அபிவிருத்தி செய்து ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி விதைக்கலாம் என இரவும் பகலும் தூக்கமில்லாமல் அலைகின்றனர்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி