உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்லாந்து தூதர் முதல்வருடன் சந்திப்பு

தாய்லாந்து தூதர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை : தாய்லாந்து நாட்டின் இந்தியாவுக்கான தூதர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகள் செய்ய விருப்பம் தெரிவித்தார். இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் பிசான் மனவாபாட், முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, சமீபத்திய தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றதற்கு, மனவாபாட் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய, தாய்லாந்து ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தாய்லாந்து தூதருடன், அந்நாட்டு துணை தூதர் சன்சாய் சரன்வாட்னகிட், முதல் செயலர் சம்சாய் மெனாஸ்வெடா மற்றும் உயரதிகாரிகள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை