உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்பத்துார் ஆவின் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம் விதிப்பு

அம்பத்துார் ஆவின் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம் விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அனுமதி அளவைவிட அதிகமாக பால் உற்பத்தி செய்தது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாதது ஆகியவற்றுக்காக, அம்பத்துார் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை கழிவு

அம்பத்துார் ஆவின் பால் பண்ணை உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளால், சென்னை கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிடக்கோரி, பசுமை தீர்ப்பாயத்தில், 'கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்' மனு தாக்கல் செய்தது.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கொரட்டூர் ஏரியில் விடப்படுவதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அம்பத்துார் ஆவின் பால் பண்ணை, அனுமதி அளவைவிட அதிகமாக, 3.75 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்படவில்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு

'இதனால், பண்ணையில் இருந்து அதிக அளவு கழிவுநீர் வெளியேறி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அம்பத்துார் ஆவின் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது' என்றார்.அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், அபராதத் தொகை மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'இது தொடர்பாக ஆவின் நிறுவனமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் 16ம் தேதி தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muthusubramanian
டிச 12, 2024 11:12

அபராதம் மட்டும் விதித்தால் போதுமா. கழிவு நீர் சுத்திகரிப்பின மேம்படுத்தவும் அதன்பிறகே பால் உற்பத்தியை தொடங்கவேண்டும் என்றும் உத்திரவை சொல்லியிருக்க வேண்டும்.


TMM
டிச 12, 2024 07:31

மாசு அடைவது கடந்த 15 ,20 வருடங்களாக உள்ளது.எப்படி?திருவள்ளூர் EMU வில் சென்றால் கொரட்டூர் வரும்போது தெறியும்,கருப்பான நீரின் கண்கொள்ளாக்காட்சி மற்றும் மிகவும் நறுமணம்வீசும் காற்று.என்னமோ புதுசா கண்டுபிடிப்பு போலசெயதி்.எதிலும் ஒரு தெளிவான அணுகுமுறை அல்லாத அரசு.


வாய்மையே வெல்லும்
டிச 12, 2024 06:36

வீணாபோன பித்தளை ஓட்டைகாலணா அரசு கஜானாவில் துட்டு இல்லையென கூறி லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஏற்றிவிடும் கேட்டால் அபராதம் கட்டவேணும் என பம்மிட்டு இருக்கும்


Kasimani Baskaran
டிச 12, 2024 06:10

மாசடைந்த அந்தத்துறை மாசை கட்டுப்படுத்தும் என்று நம்புவதைப்போல மூட நம்பிக்கை வேறு ஒன்றும் இருக்க முடியாது.


சமீபத்திய செய்தி