உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக கூட்டத்தில் புகுந்த நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: இபிஎஸ் ஆவேசம்

அதிமுக கூட்டத்தில் புகுந்த நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: இபிஎஸ் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் அதிமுக கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் புகுந்ததால் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் கோபம் அடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் மக்களை சந்தித்து இபிஎஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1whg9f0r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தீமை செய்யும் ஆட்சி

மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை போலீசாரிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை. நீங்க என்னென்ன திட்டங்களை நிறுத்தினீர்களோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் தொடரும்.அதிமுக ஆட்சியில் விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றும் கட்சி திமுக. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக அறிவித்து கைவிட்டுவிட்டார், தூய்மைப் பணியாளர்களையும் அம்போவென விட்டுவிட்டார், ஆக தேர்தல் வந்தால் அழகழகாகப் பேசுவார்கள், ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள். திமுக ஆட்சியில் போதைப் பொருள் பல வழிகளில் வந்துவிட்டது.

மக்கள் கட்சி, மக்கள் அரசு

இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. இத்தனைக்கும் முடிவுகட்டப்போகிறது 2026ம் ஆண்டு தேர்தல். அணைக்கட்டில் கலை அறிவியல் கல்லூரி, அகரம் கிராமத்தில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என இந்த தொகுதிக்கு பல திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு செயல்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S.Natarajan
ஆக 19, 2025 15:13

எஸ் yes.???????????????????????????????????????


பேசும் தமிழன்
ஆக 19, 2025 13:07

அதிமுக பிஜேபி கூட்டணி கூட்டத்தில்... ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி விடவில்லை என்று நாடகம் போட ஏதாவது சதி செயலாக இருக்கலாம்.


Kadaparai Mani
ஆக 19, 2025 12:39

எடப்பாடிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஸ்டாலின் பயந்து விட்டார் .சில இடங்களில் புரட்சி தலைவருக்கு கூடும் கூட்டம் போல் உள்ளது


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:34

ஆமா EPS ஒரு பெரிய ஆளு ஆம்புலன்ஸ் விட்டிட்டு பாக்க.. இது ஒரு டம்மி பீஸ்


raja
ஆக 19, 2025 14:58

இவரே டம்மி பீசுன்னு சொல்ற உடன் பிறப்பே அப்போ அந்த ஸ்டிக்கர் ஓட்டும் சூட்டிங் எப்படி சொல்லுவ....


Ramesh Sargam
ஆக 19, 2025 12:17

திமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் கிட்னி போன்ற உடலுறுப்புக்களை கடத்த வாய்ப்புள்ளது. காவலர்கள் எச்சரிக்கையாக அவர்களை பிடிக்கவேண்டும். ஆனால் காவலர்கள் கைகள் அந்த இரும்புக்கர மனிதரால் கட்டப்பட்டுள்ளனவே... அவர்கள் எப்படி கிட்னி கடத்தல்காரர்களை பிடிக்கமுடியும்?


G Mahalingam
ஆக 19, 2025 11:22

ஆம்புலன்ஸ் மூலம் பணமும் கடத்துவார்கள். தேர்தல் ஆணையம் டோல்கேட்டில் ஸ்கேன் மிஷன் வைக்க வேண்டும்.


ராஜா
ஆக 19, 2025 10:56

அம்மா முதலமைச்சராக இருந்த காலத்தில் வீட்டில் இருந்து புறப்பட்ட போது சாலைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அய்யா


pakalavan
ஆக 19, 2025 10:52

ஆம்புலன்ஸ்ல ஆள் இல்லாம போகக்கூடாதா? நோயாளியை கூப்பிடபோகும்போது ஆம்புலன்ஸ் காலியாத்தானே போகணும்


V Venkatachalam
ஆக 19, 2025 13:20

பகலவனுக்கு உடம்பு பூராவும் அறிவு. ஆம்புலன்ஸ் ஆள் இல்லாம போகலாம். டரைவர் இல்லாம கூட போகலாம்.. பணம் கொண்டு போகக் கூடாது. எப்போ இந்த திராவிடியா மூடல் அரசு ஆம்புலன்ஸ் ல பணம் கொண்டு போச்சோ அப்போதிலிருந்து ஆம்புலன்ஸ் மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. அதுக்கு முட்டு குடுக்குறவனுக்கு எவ்ளோ அறிவு இருக்கணும்?


V Venkatachalam
ஆக 19, 2025 17:18

நோயாளி யை கூப்பிட போகும் போது நோயாளியை வண்டியில் ஏற்றி படுக்க வைக்க இது மாதிரி சின்ன சின்ன உதவி செய்ய இரண்டு நர்ஸ்கள் ஆம்புலன்ஸில் போவார்கள்.அப்படி இல்லை யென்றால் ஆம்புலன்ஸ் பிராடு வேலைக்கு போகுதுன்னு அர்த்தம். முட்டு குடுக்குறவனுக்கு மண்டை எம்ட்டி..ன்னு அம்பலமாயிட்டு.


K.SANTHANAM
ஆக 19, 2025 10:42

விபத்து நடந்த இடத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வண்டி சைரனுடன் வேகமாக செல்லும். இதற்காக டென்ஷன் ஆகுவாங்களா... தலைமை பண்பிற்கு தகுதியில்லாத நபர்


sankaranarayanan
ஆக 19, 2025 10:33

ஆம்புலன்சில் செல்லவேண்டிய காலம் இந்த திராவிட மாடல் அரசுக்கு வந்தாகிவிட்டதைத்தான் இது நிறுபிக்கிறது கவலைப்பட வேண்டாம் டேன்ஷன் ஆக வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை