உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்பூர் பெண் தூய்மை பணியாளருக்கு ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி. வரி! அதிர வைத்த ஒரு லெட்டர்

ஆம்பூர் பெண் தூய்மை பணியாளருக்கு ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி. வரி! அதிர வைத்த ஒரு லெட்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆம்பூர்; ஆம்பூரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரியை கட்டக்கோரி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரையடுத்து கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் ராணி பாபு(60). இவர் அங்குள்ள ஆலையில் தூய்மை பணியாளராக உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rd1gx043&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராணி பாபுக்கு திருச்சி மாவட்டம் பாலக்கரை வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீசில், அவர் ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரி கட்ட வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் அதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நோட்டீசை கண்ட ராணி பாபுவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நோட்டீசுக்கும், தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அவர், இது குறித்து ஆம்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஏழ்மையான பின்னணியில் தூய்மை பணியாளராக இருக்கும் ஒருவருக்கு எப்படி ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரி நோட்டீஸ் வந்திருக்க முடியும் என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு; திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி வடக்கு பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சாலை மலைப்பட்டி பகுதியில் உள்ள நிறுவனத்தின் பெயர் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ராணி பாபு. அதாவது, ராணி பாபுவின் பான்கார்டு, ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டே நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிறுவனம் தான் வரிபாக்கியாக ரூ.1,07,50,284 வைத்துள்ளது. அதற்கு அபராதம் ரூ.1,07,05,294 மற்றும் வட்டித்தொகை ரூ.24,86,436 என மொத்தமாக ரூ.2,39,87,024 செலுத்த வேண்டும் என்று தான் நோட்டீஸ் வந்திருக்கிறது. ராணி பாபு பெயரில் நிறுவனம் உள்ள நிலையில், அவரது பெயரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காட்கரை பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணபரிவர்த்தனைக்காக கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி பாக்கியை செலுத்துமாறு ராணி பாபுவுக்கு கடந்த ஜூலை மாதமே கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மோசடி பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
அக் 22, 2024 19:02

ஆதாரை வெச்சு மோசடி பண்ண முடியாதுன்னு சொன்ன மூஞ்சிகளை வரச் சொல்லுங்க. இவிங்கள்ள பல பேருக்கு பத்ம, பத்மஸ்ரீ இன்னும்.பல புரஸ்காரெல்லாம் கிடச்சிருக்கு.


என்றும் இந்தியன்
அக் 22, 2024 17:40

கொஞ்சம் இப்படி அப்படி செய்தி வரும்.போலீஸ் விசாரிக்கின்றது,நீதிமன்றம் இதை கவனிக்கின்றது என்று .அப்புறம் ஒரு மண்ணும் நடக்காது .நாமும் மறந்து விடுவோம் இதை. கொஞ்சமாவது ஜனசேவை எங்கள் கடமை என்று போலீஸ் துறை செய்தால் இந்த மாதிரி கோல்மால்கள் உடனே கட்டுப்பாட்டுக்குள் வரும். பெட்டி வாங்குவது தான் எனது அன்றாட கடமை என்ற எண்ணம் மாறும் வரை போலீசையும் அநீதிமன்றத்தையும் மாற்றவே முடியாது.


ஆரூர் ரங்
அக் 22, 2024 17:10

மின்சாரத் துறை இதுபோன்ற தவறான பில் அனுப்பிய போது உ.பி ஸ் அமைதி காத்தனர்.


balasubramanian
அக் 22, 2024 15:02

mr. vinoth first read the content of news then give your suring reply .withe out knowing gst or income tax just blabering something. some x misused her Adhar and her identidy. sui action should be taken against that bank officer as well as gst officer. for non verification of the idendity and place of work.


Lion Drsekar
அக் 22, 2024 12:40

ஒரு தொழில் துவங்குமுன் அந்த இடத்தை நேரில் சென்று ஆவனச்செய்து ஒவ்வொரு துறையும் கொடுக்கப்படும் அங்கீகாரத்தில்தான் தொழிலே துவங்க முடியும் அப்படி என்றால், எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் கட்டப்படும் வீடுகள் போல் இன்று வியாபாரமும் வளர்ந்துவிட்டது பாராட்டப்படவேண்டும், இதற்க்கே இந்த கதி என்றால் , எந்த வித கட்டுப்படும் இல்லாமல் இயங்கும் இலவசங்களுக்கு ?? வந்தே மாதரம்


raja
அக் 22, 2024 12:35

அடிச்ச 30000 கோடி ய வெள்ளையா மாற்ற திருட்டு திராவிட கோவால் புற கொள்ளையன் ஏற்பாடோ..


Ramesh Sargam
அக் 22, 2024 12:29

ஒருவேளை அந்த கடிதத்தை படித்து, அந்த அதிர்ச்சியில் அந்த பெண்மணி உயிரிழக்க நேர்ந்திருந்தால், நல்ல வேளை அந்த பெண்மணி சுகமாக உள்ளார், ஒருவேளை உயிரிழக்க நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? இதற்குத்தான் தகுதியானவர்களை, படித்தவர்களை பணியில் அமர்த்தவேண்டும் என்று கூறுவது. சிபாரிசின் பேரில், லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்தினால் இப்படித்தான் அவலங்கள் தொடரும்.


Nagarajan D
அக் 22, 2024 11:31

எல்லா அரசு ஊழியர்களும் இப்படி தான். அதுகள் மத்திய அரசு ஊழியரா இருந்தாலும் சரி மாநில அரசு ஊழியரா இருந்தாலும் சரி... வணிக வரி துறை எப்படி யார் ஆதார் கார்டுக்கோ யாருக்கோ gst நம்பர் அளித்தது? போட்டோ கூடவா சரிப்பார்க்க படவில்லை?


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 10:25

தி. ம. வின் விசேஷமே இது தான். பெரும்பான்மை வாசகர்கள் சூப்பர் காமெடியன்கள். எந்த செய்தியா இருந்தாலும், திராவிடர், உதய் ண்ணா, சுடாலின், ஒன்கொள் - இந்த வார்த்தை களை வைத்து ஏதாச்சும் எழுதுவார்கள். படிக்க செம சுவாரசியமா இருக்கும். GST ஒன்றிய அரசின் துறை என்று கூடத் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் எல்லாம் ஒரே மாதிரி பட்டய கிளப்புவாங்க.


raja
அக் 22, 2024 12:32

அப்படியே படித்து மனம் பிறல்தவன் போல் இருக்கணும் சரியா உடன் பிறப்பே...


KRISHNAN R
அக் 22, 2024 10:18

ஆதார் மொபைல் தரவுகள், அடுத்தவர் பயன் படுத்தும் நிலை. வக்கற்ற பாதுகாப்பு இல்லா நிலை.. இதான்... அப்பாவி மக்கள் நிலை.


புதிய வீடியோ