மின்சார பாதுகாப்பு விதிகளில் திருத்தம்
சென்னை:மத்திய மின்சார ஆணைய விதிகளை பின்பற்றி, மின்சார பாதுகாப்பு விதிகளில் திருத்தங்கள் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மின் வாரியம், 650 வோல்ட் மேல், 765 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின் வழித்தடங்களின் பாதுகாப்பை, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.குடியிருப்பு கட்டடங்களில், 250 வோல்ட் திறனுக்கு மேற்பட்ட மற்றும் 650 வோல்ட் வரை மின் திறன் நிறுவப்பட்டுள்ள இடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்பு விதிகளை சுய பரிசோதனை செய்து, மின் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மற்ற பிரிவினர், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்து, ஒப்புதல் பெற வேண்டும்.