மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
'கல்வி மேலாண்மை தகவல் மையம்' எனும், 'எமிஸ்' இணையதளத்தில், பள்ளிகளில் உள்ள மாணவ - மாணவியர், ஆசிரியர், வருகை பதிவு உள்ளிட்ட அனைத்து விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில், தினமும் பதிவு மேற்கொள்ளும் பணி உள்ளதால், அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் எமிஸ் பதிவு பணிகளை குறைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. தற்போது இப்பணிகளை வெகுவாக குறைத்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆசிரியர் பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள், அடல் ஆய்வகம் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. தவிர நிதிப்பதிவு, நிறுவன பதிவு, பள்ளி நன்கொடை பதிவு, தகவல் தொடர்பு பதிவு, மனுக்கள், செயல்முறை பதிவு, உதவித்தொகை, மாணவர் ஊக்க பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாத அறிக்கை, பள்ளிகள் மின் கட்டண விபரம் உள்ளிட்டவற்றை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும் நுாலக புத்தக வினியோகம், வாசிப்பு இயக்கம், கலை திருவிழா, விலையில்லா பொருட்கள், பாடப்புத்தகங்கள், பணியாளர் தரவு ஒருங்கிணைப்பு, இடைநிற்றல் கண்காணிப்பு, பள்ளி சார்ந்த விபரங்கள் ஆகிய தலைப்புகளில், பதிவு பணிகள் குறைக்கப்பட்டுள்ளன. - நமது நிருபர் -
23-Jan-2025