ஒன்றுபட அமித் ஷா அறிவுரை
பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று முன்தினம், 57வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை, தொலைபேசியில், மத்திய அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, 'பா.ம.க., இரு பிரிவாக இருந்தால், இருவருக்குமே பலனில்லை. எனவே, தந்தையுடன் இணைந்து, கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும்' என, அமித் ஷா ஆலோசனை கூறியுள்ளார். . பீஹார் தேர்தலுக்கு பின், தமிழகத்தில் கூட்டணி பணிகளில், அமித் ஷா தீவிரமாக ஈடுபட உள்ளார். அதனால் தான், கூட்டணிக்கு வாய்ப்புள்ள கட்சித் தலைவர்களுடன், பேசி வருகிறார். இதையடுத்தே, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன்; தொலைத்து விடுவேன்' என எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும், அமித் ஷா உடன் பேசியதை கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்த அன்புமணி, தன்னையே தேர்தல் கமிஷன் அங்கீகரித்து, மாம்பழம் சின்னம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.