உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் அமித் ஷா

பொங்கல் விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் அமித் ஷா

திருச்சி: ''திருச்சியில், வரும் 5ல் நடைபெறும் பொங்கல் விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: தலை குனிந்துள்ள தமிழகத்தை தலை நிமிர்த்த வேண்டும் என்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், இரு மாதங்களுக்கு முன் பிரசார பயணத்தை துவங்கி, தமிழகம் முழுவதும் 52 மாவட்டங்களில் பயணத்தை செய்துள்ளார்.இதன் நிறைவு நிகழ்ச்சி, வரும் 4ல் புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். மறுநாள் காலை ஜனவரி 5ம் தேதி , திருச்சி, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், தமிழகத்தின் கலாசாரமாக இருக்கும் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில், 2,000 பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ளது.அன்றைய தினம், தமிழக பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு மற்றும் மையக் குழுவைச் சேர்ந்தோரை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை அமித் ஷா குழுவினருக்கு வழங்க உள்ளார்.புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சித் தலைவரான பழனிசாமி பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் அன்றைய தினம், சேலத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு முருகானந்தம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gajageswari
ஜன 02, 2026 10:09

மாசு ஏற்படுத்தாத ஆரஞ்சு குறியீடு தொழிற்சாலை எதிராக போராட்டம் நடத்துபவர்


Santhakumar Srinivasalu
ஜன 02, 2026 06:21

நல்ல பொங்கல் சாப்பாடு போட்டு கவனிச்சு அனுப்புங்க!


Priyan Vadanad
ஜன 01, 2026 23:06

நரித் தந்திரம் கொண்டோரின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்கக்கூடாது.


vivek
ஜன 02, 2026 08:11

ஊசி போன வடை விற்பனை ஆகாது


V GOPALAN
ஜன 01, 2026 22:45

Only one percent of Trichy voters know Nainar Nagendran. He is not familiar to any one like annamalai. This time BJP will get only 4 to 5 percent vote


ஜெகதீசன்
ஜன 01, 2026 21:07

சபாஷ். பொங்கல் எனும் இந்து வாழ்வியல் திருநாளை சமத்துவ பொங்கல் என்று இங்கு ஒரு தவறான கருத்தியலை உருவாக்க முயற்சிக்கும் வேளையில் பாஜக இதை இந்து பண்டிகையாக கொண்டாடுவது சிறப்பு... தேவையும் கூட.


Priyan Vadanad
ஜன 01, 2026 20:54

ஏன் மதுரைக்கு போகவில்லை?


MARUTHU PANDIAR
ஜன 01, 2026 20:45

அண்ணாமலையை மாநில அளவிலான பொறுப்பில் நியமிக்கும் வரை பலன் பூஜ்யம் தான் தயவு செஞ்சு டெல்லியிலிருந்து வேலை பார்த்தால் பிரயோஜனம் உண்டு.


Barakat Ali
ஜன 01, 2026 20:28

இனி கதறல் .... ஸ்டார்ட் தி ம்யூசிக் ......


திகழ்ஓவியன்
ஜன 01, 2026 19:59

எத்துணை முறை வந்தாலும் 2014 repeat ஆவதை எந்த கொம்பாதி கொம்பன் ஆள் தடுக்க முடியாது


vivek
ஜன 01, 2026 20:32

திகழ் இருநூறு ரூபாய்க்கு முன்னூறு ரூபாய்க்கும் எவளோ முறை கதறி கூவினாலும் உனக்கு அதே சொம்பு தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை