உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும்: இ.பி.எஸ்.,

கூட்டணி சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும்: இ.பி.எஸ்.,

சென்னை : தமிழகத்தில், சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திடீர் பயணமாக நேற்று (மார்ச் 25) டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் 'கூட்டணி வேறு கொள்கை வேறு, கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும்' என இன்று இபிஎஸ் அளித்த பேட்டியில் சஸ்பென்ஸ் வைத்தார்.கடந்த, 4ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்துாரில் பேட்டி அளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வின் ஒரே எதிரி தி.மு.க., தான். மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள்' என்றார். இந்நிலையில், நேற்று (மார்ச் 25) 'ஏர் இந்தியா' விமானத்தில், பழனிசாமி டில்லி சென்றார். சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், அவர் டில்லி சென்றதால், அவரது பயணம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, டில்லி சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கு அவர் யாரை சந்திக்க போகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. அப்படி சந்திக்கும்போது, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.இதனால், பழனிசாமியின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. டில்லியில் அவரிடம் செய்தியாளர்கள், 'நீங்கள் முக்கிய நபரை சந்திக்க டில்லி வந்துள்ளதாகக் கூறப்படுகிறதே' என்று கேட்டற்கு, ''நான் எதற்காக டில்லிக்கு வந்துள்ளேன் என்பதே தெரியாமல் கேள்வி கேட்கிறீர்கள். ''முக்கிய நபர் யாரையும் சந்திக்க, நான் டில்லி வரவில்லை. எங்கள் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, வர முடியவில்லை. அதை பார்வையிடுவதற்காகவே டில்லி வந்துள்ளேன்,'' என்றார்.பின், அங்கிருந்து நேராக, டில்லியில் சாகேத் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு அறையாக பார்வையிட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹோட்டலுக்கு சென்று தங்கிய பின், இரவு 9:00 மணி அளவில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். ஆரம்பத்தில் பழனிசாமியுடன், தம்பிதுரை, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். அதன்பின், பழனிசாமியும், அமித்ஷாவும், தனியாக, 15 நிமிடங்கள் பேசினர். ஏற்கனவே, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தயாராகி வருவதாக, தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு, கூட்டணியை உருவாக்குமோ என்ற செய்தி பரவியது. இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2019 முதல் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., அரசுக்கு எதிரான அலை இருந்தாலும், வலுவான கூட்டணி இல்லாமல், வரும் சட்டசபை தேர்தலில், அக்கட்சியை வீழ்த்த முடியாது. தனிக்கட்சி துவங்கியுள்ள விஜய், தனித்து போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். எனவே, பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணி இல்லாமல், கொங்கு மண்டலம், சென்னை போன்ற நகர பகுதிகள், கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் வெல்வது கடினம். இதை பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே அமித்ஷாவை சந்தித்துள்ளார். என்ன பேசப்பட்டது என்பது இனிமேல் தான் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனும், நேற்று டில்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, வாசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வரும்!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்திப்புக்குப் பின், அமித் ஷா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், 'வரும் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்றைய டில்லி பயணம் குறித்து அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மும்மொழி கொள்கை உள்பட பல மக்கள் நலன் தொடர்பான பிரச்சனைகளையே பேச டில்லி வந்தேன். உள்துறை அமைச்சரை சந்தித்தேன். முல்லை பெரியாறு அணை , மேகதாது அணை நீர்மட்டம், மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். தமிழகத்தின் போதை நடமாட்டம் குறித்து எடுத்து சொன்னோம். தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் வேகமான விசாரணை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

இப்போது என்ன தேர்தலா நடக்கிறது ?

கூட்டணி குறித்து ஏதும் பேசினீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு ; இப்போது என்ன தேர்தலா நடக்கிறது. பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேசி கொள்ளலாம். பத்திரிகைகள் தங்களின் விறு,விறுப்பிற்காக எதையும் போடுகின்றனர். கூட்டணி வேறு கொள்கை வேறு, கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும். இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கூட்டணி குறித்து பேச வேண்டாம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 83 )

Ray
மார் 29, 2025 14:09

இதை பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர் என்கிறார்கள். உலகில் தலைவனாகப்பட்டவன்தான் தொண்டர்களுக்கு நிலவரங்களை எடுத்து சொல்வான் இங்கு தலை கீழாய் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கட்சியில் தலைவராகலாம்னு சொன்னவர் இப்படி ஆட்கள் தலைவனாவார்களென்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 26, 2025 16:32

அண்ணாமலை ஒரங்கட்ட அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.


ராஜாராம்,நத்தம்
மார் 26, 2025 17:21

காசா பணமா அடிச்சிவிடு அடிச்சிவிடு .


ராமகிருஷ்ணன்
மார் 26, 2025 16:25

கட்டுமரம் இருந்த போது செய்த டுபாக்கூர் டகால்டி வேலையெல்லாம் துண்டு சீட்டு செய்யும் போது மக்களிடம் எடுபடவில்லை. இவங்க எப்பவுமே இப்படித்தான் செய்வார்கள் என்று சலித்துக் கொள்கிறார்கள் மக்கள். ஆனால் கட்டுமரம் சுருட்டியதை விட வெளிப்படையாக மிக அதிக அளவில் சுருட்டுகிறார்கள். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பார்த்தால். இதற்கு இவ்வளவு பணம் வராதே என்று சொல்கின்றார்கள்


venugopal s
மார் 26, 2025 16:24

அதிமுக என்ற ஆடு சிக்கிக் கொண்டது, பிரியாணி போட வேண்டியது தான்!


P. SRINIVASAN
மார் 26, 2025 15:35

இந்த பசனிசாமி சுயநலத்துக்காக தமிழ்நாட்டையும் அடகுவைப்பர்.. பிஜேபி சொம்பு தூக்கி


vivek
மார் 26, 2025 16:11

பாரா.....அதை சொல்ல உனக்கு தகுதி இல்லை கொதடிமயே சீனு


sridhar
மார் 26, 2025 16:14

திமுக சொம்புதூக்கி என்றால் தான் படு கேவலம்.


Mahendran Puru
மார் 26, 2025 12:38

எல்லாம் ஒரு தக்கவைத்தல் வியூகம்தான். தொண்டர்களை தக்க வைக்க அன்று பாஜகவை விரட்டினார். இன்று தலைகளை தக்க வைக்க பாஜகவுடன் உறவு கொண்டாடுகிறார். பாஜகவும் கட்டுத்தொகை இழக்காமல் இருக்க பழனிசாமியை வளைத்துப் போட்டுள்ளது. அதுவும் தென் மாநில முதல்வர்கள் ஒரு கூடிய நிலையில் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை நிருத்த அமித் ஷா எடுத்த முடிவு.


Rengaraj
மார் 26, 2025 12:36

அண்ணே இங்கே பாலாறும் தேனாறும் தேவையில்லை. பற்றாக்குறை எதுவும் இல்லாமல் அங்கே எப்படி உபரி பட்ஜெட் போடறாங்கன்னு தெரிஞ்சு அதே மாதிரி இங்கே போட்டால் போதும். உபரி பட்ஜெட் இருந்தாலே நமக்கு வேண்டிய திட்டங்களை அரசாங்கம் எப்போதுமே செய்துகொடுக்கும். யாரையும் கேட்டு கெஞ்சிக்கொண்டுஇருக்கவேண்டாம். கடன் இல்லாமல் வாழமுடியாது. அந்த கடனே அரசாங்கத்தின் கழுத்தை நெறிக்கக்கூடாது.


Muralidharan S
மார் 26, 2025 12:16

அதிமுகவும் ஒரு ஊழலில் ஊறிய கட்சிதான்.. பாஜக அதிமுகவுடன் செல்வது, அண்ணாமலையின் இமேஜை பாதிக்கும்.. அல்லது அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைக்கப்படும். அண்ணாமலை இல்லாத பாஜக, தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.. பாஜாக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர அண்ணாமலையை தவிர வேறு யாரும் காரணம் அல்ல. அண்ணாமலைக்கு முக்கியத்துவம் இல்லாத பாஜகவிற்கு தமிழகத்தில் ஒட்டு விழாது.. தமிழிசை கட்சிக்குள் அரசியல் செய்யவே மீண்டும் கட்சிக்குள் வந்துள்ளார். தமிழிசைக்கோ, எச்.ராஜாவுக்கோ அல்லது வேறு யாருக்கோ தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒட்டு விழாது.. இது எல்லாம் அமித்ஷாவுக்கும் தெரிந்துதான் இருக்கும்.. பாப்போம் என்ன நடக்கிறது என்று..


sridhar
மார் 26, 2025 16:16

ஊழல் ஒரு பிரச்சினை என்றால் தமிழகத்தில் ஒரு திமுகக்காரன் கூட எம்எல்ஏ ஆக முடியாது .


Haja Kuthubdeen
மார் 26, 2025 20:24

தம்பி முரளி பிஜெபிக்கு விழுந்த வாக்கெல்லாம் அண்ணாமலைக்கு விழுந்ததா???


Muralidharan S
மார் 26, 2025 12:02

தமிழகத்தில் ஆளும்கட்சியினரின் ஊழல்கள் பற்றி நீதிமன்றத்தில் நிற்ககூடிய ஆதாரம் இருந்தால், ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவர்களை மத்திய அரசு உள்ளே தள்ளினா போதும்.... தமிழகத்தில் பாஜக ஒரு பிரதான எதிர்க்கட்சியாக 2026ல் வரலாம் . ஆனால், 12 வருட பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை.. முதலில் மத்திய அரசு, ஊழல்வாதிகள் வெளியே வராதபடி ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கட்டும்.


Velan Iyengaar
மார் 26, 2025 11:46

பங்கு பிரித்துக்கொண்டார்களா ??


Muralidharan S
மார் 26, 2025 12:24

பங்கு பிரிக்கறதில உன்னோட கும்பல்தான் எக்ஸ்பெர்ட். அங்க கேளு.


sridhar
மார் 26, 2025 16:18

1000 கோடியில் யார் யாருக்கு என்ன பங்கு. ஞானசேகருக்கும் அந்த சாருக்கும் அந்த விஷயத்தில் என்ன பங்கு.


புதிய வீடியோ