உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

மதுரை: மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜுன் 8) நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். ஆதினம் வெளியிடும் 'தமிழாகரன்' இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும் அவருக்கு ஆதினம் வழங்கினார். மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

புரொடஸ்டர்
ஜூன் 08, 2025 21:01

அமித்ஷாவுக்கு மதுரை மீனாட்சியம்மன் அருள்புரிவாராக?


arumugam mathavan
ஜூன் 08, 2025 14:32

அன்னை மீனாட்சியின் அருள் என்றும் இந்திய தேச நலனை காக்கும் அமித்க்ஷாக்கு நிச்சயம் உண்டு. வெல்லட்டும் நீதி, நியாயம், நேர்மை, நல்லாட்சி மலரட்டும்.