உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனுக்கு உடல் நலக்குறைவு

அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனுக்கு உடல் நலக்குறைவு

சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அ.ம.மு.க.,வின் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை அறிக்கை

இது குறித்து டில்லி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: டி.டி.வி., தினகரனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடந்தது. நேற்று அனுமதிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MARUTHU PANDIAR
ஏப் 11, 2025 14:33

ஓட்டுக்களை பிரித்து டீம்கா ஜெயிக்க தான்னாலான கைங்கரியத்தை செய்த பெருந்தகை.


Vijay D Ratnam
ஏப் 11, 2025 14:30

இதெல்லாம் ஒரு நியூஸா.


Anbuselvan
ஏப் 11, 2025 12:14

திரு அமித் ஷா அவர்கள் வரும் நேரத்திலா உடல்நல குறைவு ஏற்பட வேண்டும்? சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை