மேலும் செய்திகள்
அத்திக்கடவு திட்டத்தில் சொதப்பிய நிறுவனம்!
16-Oct-2024
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வீரப்பம்பாளையத்தில் நேற்று நடந்தது. அதில் பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:தி.மு.க.,வில் ஒரு குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தில் உள்ளனர். குடும்ப அரசியலை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு 'வென்டிலேட்டர்' வைப்பது போல, சேலத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல், அமைச்சர் பதவி வந்ததும், மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு பேசினார்.நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம், ''அ.தி.மு.க., குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் பேசாததற்கு மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 30 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது அ.தி.மு.க.,வை எப்படி விஜய் விமர்சிப்பார்?,'' என கேள்வி எழுப்பினார் பழனிசாமி.அவரிடம், 'தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'விடியல்' பயணம் மேற்கொண்டு ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். அப்படி ஏதும் திட்டம் உள்ளதா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பழனிசாமி, ''கொஞ்சம் பொறுத்திருங்கள். நிறைய திட்டம் வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் இப்போதே தெரிவிக்க முடியாது,'' என, பதிலளித்தார்.
16-Oct-2024