உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி

வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி

வன்முறையை துாண்டுவோருக்கு பொறுப்பு கொடுத்து, அன்புமணி ஊக்கப்படுத்தி வருகிறார். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு அன்புமணியின் நடைபயணம் தான் காரணம். நடைபயணம் என்ற பெயரில், என்னை அவமானப்படுத்தி, என்னுடன் உள்ள பா.ம.க.,வினரை ஒழிக்க திட்டமிட்டு,வன்முறையை துாண்டி வருகிறார். இதனால் அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. அன்புமணி நடைபயணத்திற்கு, இனியும் அனுமதி வழங்கினால், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். இதை கவனத்தில் வைத்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அருளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், அன்புமணி கும்பலை தடை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். - ராமதாஸ் பா.ம.க., நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !