உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோடு ஷோ என்ற பெயரில் டிராமா ஷோ முதல்வரை விளாசும் அன்புமணி

ரோடு ஷோ என்ற பெயரில் டிராமா ஷோ முதல்வரை விளாசும் அன்புமணி

வேலுார்:''ரோடு ஷோ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் டிராமா ஷோ நடத்தி வருகிறார்,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார். வேலுாரில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பா.ம.க., தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b0lg29l5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு துாங்கி கொண்டிருக்கிறது. அரசு செயல்படவே இல்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அந்த காலத்தில் மன்னர்கள் அமைச்சரைப் பார்த்து நாட்டு நிலவரம் குறித்து கேட்பர். 'அமைச்சரே, நாட்டு நிலவரம் என்ன?' என்று கேட்டதும், 'மாதம் மும்மாரி மழை பொழிகிறது மன்னரே' என்று அமைச்சர் பதிலளிப்பார். மன்னர் சந்தோஷமாக சென்று விடுவார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான், தமிழக அமைச்சரவை உள்ளது. சமீப காலமாக, தமிழக முதல்வரை ஊர் ஊராகக் கூட்டிச் செல்கின்றனர். அங்கு, அவர் ரோடு ஷோ நடத்துகின்றனர். ரோட்டின் இரு புறமும், ஆட்களை கூட்டி வந்து நிறுத்துகின்றனர். முதல்வரைப் பார்த்து கையசைக்க, அவர்களை நோக்கிச் செல்லும் முதல்வர், அவர்களோடு கைகுலுக்கிச் செல்கிறார். இப்படி அழைத்து வரப்படும் பெண்களிடம், 'நீங்க நல்லா இருக்கீங்களா?' எனக் கேட்பார் முதல்வர். உடனே, 'உங்கள் ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று பெண்கள் சொல்வார்கள். 'இதைத்தான் முதல்வர் கேட்பார்; இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும்' என்று முன் கூட்டியே வகுப்பெடுத்து, பெண்களை ரோடு ஷோவுக்கு தி.மு.க.,வினர் அழைத்து வருகின்றனர். இப்படியொரு டிராமா ஷோவைத்தான், சமீப காலமாக அடிக்கடி நடத்தி வருகிறார் முதல்வர். கல்லனையிலிருந்து நீர் திறப்பதெல்லாம் முதல்வருக்கான வேலையா? முன்பெல்லாம், அதை பொதுப்பணித் துறை அதிகாரிகளே செய்து முடிப்பர். வெற்று விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாத்தனுார் அணையில் நீரை திறப்பதற்காக, முதல்வர் அனுமதி கேட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். முதல்வர் அனுமதி தர தாமதமானதால், அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில், வணிக நிறுவனங்கள், 'தமிழகத்தை, ஏன் முதலீட்டுக்கு விருப்பமான மாநிலமாக தேர்வு செய்கின்றன?' என உள்ளது. தி.மு.க., அரசை பற்றி, வருங்கால அரசு அதிகாரிகள் நல்லெண்ணம் வைக்க வேண்டும் என் கிற நோக்கோடு இப்படியொரு கேள்வியை சேர்த்துள்ளனர். குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தி.மு.க.,வினருக்கே பதில் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ