உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.கடந்த ஆக., 17ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல அன்புமணி செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

SENTHIL NATHAN
செப் 12, 2025 11:01

நா ம க எம் எல் ஏ க்கள் கட்சியில் இருந்து தூக்க படவேண்டும்


நிக்கோல்தாம்சன்
செப் 11, 2025 19:02

தவறான முடிவு தலைவரே , அந்த திருட்டு ரயில் மாதிரி நெனச்சுடீங்களா , அவருக்கு தத்தி புள்ள... உங்களடையதோ யோசிக்கும் பிள்ளை...


திகழ்ஓவியன்
செப் 11, 2025 18:53

பிஜேபி தங்களால் முடிந்த சிறு உதவி எப்படி உதவித்தகரே ஷிண்டே ,அதே ஸ்டைல் இல்


Vasan
செப் 11, 2025 17:03

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் தைலாபுரம் மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டு தின்னலாம்


Vasan
செப் 11, 2025 16:56

I thought count down days will go like this. 10 9 8 7 6 5 4 3 2 1 0 -1 -2 -3 ...


Vasan
செப் 11, 2025 16:55

Anbumani Anne, please file a petition and seize the mango symbol till the upcoming mango season, which is April 2026.


Perumal Pillai
செப் 11, 2025 15:35

இரண்டு பொண்டாட்டி syndrome இந்த வயதான கிழவரையும் விட்டுவைக்கவில்லை. .


P. SRINIVASAN
செப் 11, 2025 14:36

இப்போ அன்புமணி ராமதாஸை நீக்குவார்...


G.Kirubakaran
செப் 11, 2025 14:25

தமிழக கட்சிகளின் ஜன நாயக நிலைமை இது தான். திமுக ,மதிமுக , tethimuka, பாமக அணைத்து கட்சிகளும் குடும்ப ஆட்சி தான்


கல்யாணராமன் சு.
செப் 11, 2025 16:04

தமிழகம் மட்டுமல்ல, தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்திலும் இதே நிலைமைதான் . ... சமீபத்தில்தான் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் தன்னோட பொண்ணை வெளியேத்தினார் . ..


A.Gomathinayagam
செப் 11, 2025 14:00

சாதி ,இட ஒதுக்கீடு என குறுகிய நோக்கம்களுக்காக ஆரம்பித்த குடும்ப கட்சி, பதவி அதிகாரத்துக்காக உடைவதில் வியப்பு ஒன்றும் இல்லை


திகழ்ஓவியன்
செப் 11, 2025 18:54

மதம் மதம் மொழி என்று மக்களை பிரிக்கும் கட்சிக்கும் இதே நிலை வரும் அவர்களுக்கு படிப்பறிவு கிடைக்க பெற்றால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை