உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு அன்புமணி வலியுறுத்தல்

நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:'மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து, தெரு நாய்க்கடி பிரச்னைக்கு, தமிழக அரசு தீர்வு காண வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தெரு நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவது, தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களை படிக்கும் போது, வெறிநாய்க்கடி பாதிப்பு முக்கிய செய்தியாக இடம்பெறுகிறது. சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு, வெறிநாய் கடித்து சிகிச்சை பெற, தினமும் குறைந்தது மூன்று பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பிற பகுதிகளிலும் இதே நிலை தான். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டில் வெறிநாய் கடித்ததால், ரேபிஸ் நோய் தாக்கி 47 பேர் இறந்துள்ளனர். தெரு நாய்க்கடி சிக்கலுக்கு, அரசால் மட்டும் தீர்வு காண முடியாது. புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய, செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் வாயிலாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதை தொடர் இயக்கமாக அரசு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை