மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
20-Sep-2025
சென்னை: 'எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, வரும் செமஸ்டர் தேர்வே இறுதி வாய்ப்பு' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலை, தொலைதுார கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படித்து, பல ஆண்டுகளாக அரியர் வைத்திருந்து, பட்டம் பெற முடியாதவர்கள் உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு அரியர் தேர்வு நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்தது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி வாய்ப்பாக, நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடக்க உள்ளது. இதில், அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதலாம். தேர்வு கட்டணம் தவிர்த்து, சிறப்பு கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்தி, https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில், மாணவர்கள் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
20-Sep-2025