உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கு வராமல் டிமிக்கி; மோசடி பேராசிரியர்களின் வில்லத்தனம்!

விசாரணைக்கு வராமல் டிமிக்கி; மோசடி பேராசிரியர்களின் வில்லத்தனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரே நேரத்தில் பல கல்லுாரிகளில் பணியாற்றுவதாக நடந்த மோசடியில், குற்றச்சாட்டுக்கு ஆளான 676 பேராசிரியர்கள் முக்கால்வாசி பேர் விசாரணைக்கு வராமல் ஏமாற்றியுள்ளனர்.அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பேராசிரியர் நியமன மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 676 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மோசடியை அறப்போர் இயக்கம் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை உறுதி அளித்தது. முதல் கட்டமாக, மோசடியில் சிக்கிய கல்லூரிகளுக்கு விளக்க கடிதம் கேட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் மோசடியில் சிக்கிய 676 பேராசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இந்த பட்டியலில் உள்ளவர்களில் வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றனர்.வெளி மாவட்டங்களில் இருந்து பல பேராசிரியர்களும் சென்னை வருவதில் சிரமம் ஏற்பட்டு விசாரணை தடைபடும் என்று கருதி, மண்டல வாரியாக 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.இந்த குழுக்கள் நான்கு இடங்களுக்கு சென்று விசாரணையை நடத்தி முடித்து இருக்கின்றன. எஞ்சிய 2 இடங்களான சென்னை மற்றும் கோவையில் இம்மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விசாரணைக்குழு முன்பு ஆஜரான 170 பேராசிரியர்களில், பெரும்பாலானவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் தான் விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 19:20

அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்புலம் இல்லாமல் இப்படிப்பட்ட தைரியம் வராது .......


Lion Drsekar
அக் 26, 2024 16:36

பின்புலம் பலமாக இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் , 1970 களில் நான் தனிமையில் செய்ததை தற்போது ஒரு அமைப்பாக செய்கிறார்கள், பாராட்டுக்கள், ஆனால் முடிவு விழலுக்கு இறைத்த நீர், ட்ராபிக் ராமசாமி ஐயா மற்றொரு உதாரணம், அவர் எதற்காகவெல்லாம் போராடினாரோ , நீதிமன்றமும் இவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தாலும் இன்று நடைமுறையில் மீண்டும் பழைய நிலைக்கே எல்லாம் சென்றுவிட்டது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யார் தொடுப்பார்கள், ? தொடுப்பவருக்கும் அதே நிலைதான் > அவரது காலமும் முடிந்து போகும் , முடிவு நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கும், ஹிரண்யாய நமஹ


Suppan
அக் 26, 2024 16:03

அண்ணாதுரை சொன்னதெல்லாம் தேர்தலுக்காக. அப்பாவி இ பொதுமக்களுக்கும் நம்பினாங்க . அப்பவே அவருடைய தலைவரு ராம் சாமி நாயக்கர் சொன்னது. "நம்ம பசங்கள பத்தி தெரியாதா என்ன. படிய திருப்பிப்போட்டு அளப்பானுங்க .


N.Purushothaman
அக் 26, 2024 15:56

உயர்கல்வித்துறைக்கு அமைச்சரா இருந்தவனே திருடர் ன் தானே ... அப்பறம் என்ன வெங்காயம் ?


S Regurathi Pandian
அக் 26, 2024 15:51

இதுபோன்ற மோசடியில் / குற்றங்களில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை? சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? கட்சி சாராமல் கல்வியை நோக்கமாக கொண்டு விவாதிக்க வேண்டும்


S Regurathi Pandian
அக் 26, 2024 15:49

நிர்வாகங்களுக்கு தெரியாமல் இப்படி நடக்குமா? எந்த நிர்வாகத்தின் பெயரும் இதுவரை வெளிவரவில்லை. இதுகுறித்து தமிழக ஆளுநர் அவர்களும் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை


நிக்கோல்தாம்சன்
அக் 26, 2024 15:45

இன்னமும் இவர்கள் பணியில் நீடிக்கிறார்களா ?


M S RAGHUNATHAN
அக் 26, 2024 14:21

Very simple. File an FIR and approach court to issue NBW..Everybody will come Automatically.


Jysenn
அக் 26, 2024 13:50

Common sense shouldnt be associated with getting degrees. Annathurai was claimed to be an MA and still he cheated the public using the slogan "Three Measures of Rice for One Rupee". One could be a PhD in Quantum Mechanics and still be a certified fool.


Ganapathy
அக் 26, 2024 13:07

பான் கார்டு எதுக்கு இருக்கு? வச்சு ஆப்படிக்கவேண்டியதுதானே. ஆனா மொதல்ல பாஸ்போர்ட்டை முடக்கிட்டு பின்ன ஆப்படிக்கவும்


முக்கிய வீடியோ