உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை சம்பவம்: தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்றும் சென்னையில் விசாரணை

அண்ணா பல்கலை சம்பவம்: தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்றும் சென்னையில் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய குழுவினர், நேற்று(டிச.,30) 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்திய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்துப் பேசினர். இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், திமு.க., பிரமுகர் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n476277l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் மாணவி பற்றிய முழு விவரங்களுடன் எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம், பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களம் இறங்கியுள்ளது.நேற்று சென்னை வந்த மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர், அண்ணா பல்கலையில் வெவ்வேறு துறைகளில் 7 மணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தினர்.பல்கலை பேராசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து, இன்று மாலை கவர்னர் ரவியை, ராஜ் பவனில் சந்தித்த மகளிர் ஆணைய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்தனர். இன்றும் விசாரணை நடத்தப்போவதாக ஆணைய குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
டிச 31, 2024 08:02

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு புகார் கொடுக்கும் போது காவல்துறையினர் டார்ச்சர் கொடுத்துள்ளனர் என்று தெரிய வந்து உள்ளதாம் ....காவல்துறையினர் திருட்டு திராவிடனை மிஞ்சிடுவானுங்க போல ....


அப்பாவி
டிச 31, 2024 07:13

என்னத்த முக்குனாலும் சாரையும், ஆடி காரையும் கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு வேளை விடியல் அரசை டிஸ்மிஸ் பண்ணி கெவுனர் ஆட்சி வந்தால் ஞான பிரியாணிக்கி லாடம் கட்டி கண்டுபிடிக்கலாம். எவன் கண்டான் சார் ஒரு பி.ஜெ.பி ஆளோ என்னவோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 30, 2024 21:24

ஏன் ? அந்த சார் யாருன்னு கண்டுபுடிக்கிறதுக்கா ?


Constitutional Goons
டிச 30, 2024 21:09

நீதிபதிகள், அரசியல் கட்சிகள் ஏன் இப்படி ஒரு மாணவியின் வாழ்க்கையயை வாய்த்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் விசாரிக்கலாம். தேவைப்பட்டால் மூன்று நாட்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்கோ கூட விசாரிக்கலாம். ஒன்றும் குரைந்து விடப்போவதில்லை


Svs Yaadum oore
டிச 30, 2024 20:29

கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பிய +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... குமரியில் அதிர்ச்சி....இந்த தொடர் செய்திகளை படித்தால் நாடு எப்படி கேடு கெட்ட நிலைமையில் போதை கள்ள சாராராயம் ஒழுக்கமின்மை என்று சீரழிந்த நிலைமையில் உள்ளது புரியும் ....இதற்கெல்லாம் காரணம் விடியல் திராவிடனுங்க ஒழுக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லாத சமூகத்தை இங்கு வளர்த்து வருவது புரியனும் .....உடனடி தேவை பள்ளி கல்வி முழுக்க சீர்திருத்தம் .....இது மக்களுக்கு புரியனும் .....இல்லையென்றால் இது போல் பள்ளி மாணவிகள் சீரழிவது விடியல் ஆட்சியில் தொடரும் ....


சமீபத்திய செய்தி