உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போராட வந்த சீமான் கைது

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போராட வந்த சீமான் கைது

சென்னை: அண்ணா பல்கலை, மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. போராட்டம் நடத்திய பா.ஜ.,வினரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று (டிச.,31) காலை 10:00 மணிக்கு அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு சீமான் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, சம்பவ பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சீமான் அழைப்பை தொடர்ந்து போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சியினர் கூட, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.போலீசாரின் கைது நடவடிக்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அங்கே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் சீமான் காரில் வந்தார். பின்னர் காரில் இருந்த இறங்கி போராட்டக்களம் நோக்கி செல்ல முயன்ற அவரை போராட அனுமதி இல்லை என்று கூறி போலீசார் கைது செய்தனர்.

அறவழியில் போராட மறுப்பா?

முன்னதாக, போராட்ட களத்திற்கு வந்த சீமான் காரில் இருந்த படியே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 'ஒரு பத்திரிகையாளரையே சந்திக்க விடவில்லை என்றால் எப்படி? எதற்கு போராட வந்து இருக்கிறேன் என்று கூட சொல்ல விட மறுக்கின்றனர். அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை' என குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

GoK
டிச 31, 2024 18:12

இந்த திருட்டு கும்பல்தான் ஜனநாயகத்தை காப்பாத்த அரசியல் சாசனத்தை காக்க போராடுறானுங்க


seetha
டிச 31, 2024 14:42

அவரு தானை தலைவன் இல்லை...... தானே தலைவன்


SUBRAMANIAN P
டிச 31, 2024 14:04

தமிழ்நாட்டுல போலி போராளிகள் னு ஒரு பத்து இருவது பேரு இருந்தானுங்க... அவனுங்க எல்லாம் இப்போதான் ஒரு வாரத்துக்கு முன்னே செத்துபோனானுங்க..


Kumar Kumzi
டிச 31, 2024 16:51

நம்பிள் தானை தலைவி புரூட் லங்குவேஜியும் போராளி தானேங்க செத்து போயிட்டாளா


மோகன்
டிச 31, 2024 13:37

யார் அந்த சார்......


மோகன்
டிச 31, 2024 13:35

போராட வர்றவங்களுக்கு, ட்வீட் போடறவங்களுக்கு குண்டாஸ் போடும் இந்த கையாலாகாத அரசு இந்த காம கொடூரன் மேல் ஏன் குண்டாஸ் போடவில்லை.


N.Purushothaman
டிச 31, 2024 12:44

விமர்சனங்களை எதிர்கொள்ள வக்கில்லாத அரசு ..திராணி இல்லாத அரசு ....இவனுங்க எப்படி இதையெல்லாம் படிப்பினையாக எடுத்துக்குவானுங்க ?


Duruvesan
டிச 31, 2024 12:10

கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க ,இனி எவனாவது போராட வந்த குண்டாஸ் கேஸ் போட்டு 3 வருஷம் உள்ளை தள்ளிட்டு 2026 ல அன் அப்போஸ்ட் ஆ ஜெயிச்சுடுவாரு ,ஆக அடிமைகள் விடியல் சாருக்கு வோட்டு போடணும்


Barakat Ali
டிச 31, 2024 12:02

மணிப்பூருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய அம்மணி தமிழ் மாணவிக்காக போராட வரலையா?? விஜய், புஸ்ஸி ஆனந்த்?? ஸநாதத்தை கொசுபோல ஒழிப்பேன்னு சொன்னவர் & கோவில் கோவிலாக போகும் பகுத்தறிவு அம்மணி தமிழ்நாட்டு மாணவிக்காக அந்த சார் ஐ எதிர்த்து போராடலையா ???? என்னங்க இதெல்லாம் ????


MUTHU
டிச 31, 2024 11:46

தானை தலைவர் வைகோ பேச்சு மூச்சை காணோம்.


Duruvesan
டிச 31, 2024 12:07

அவரு கனி அக்கா தலைமையில் மட்டுமே வருவாரு


SUBRAMANIAN P
டிச 31, 2024 14:05

அவரே பாவம். அவரைப்போயி வரலையா வரலையா ன்னு கேட்டா


Sidharth
டிச 31, 2024 11:37

படிக்கும் கல்லூரியில் ஜோடியுடன் இருட்டு புதருக்குள் எந்த வில்லங்கமும் வராமல் மனம் "திறந்து பேசி" கொண்டிருக்கும் உரிமைக்காக ப்ராடும் சைமன் மற்றும் மலைக்கு நன்றி நன்றி நன்றி


N.Purushothaman
டிச 31, 2024 12:42

அதெப்பிடி திமிங்கலம் திருட்டு திராவிடனுங்க இந்த சம்பவத்திற்கு பின்னாடி அப்படியே வேற மாடுலேஷன்ல்ல பேசறானுங்க ? இப்படி எல்லாம் எழுத வெக்கமா இல்லை ? ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்தினப்போ இனிச்சுது இல்ல ...


Duruvesan
டிச 31, 2024 13:18

என்ன ,,,


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2024 13:35

மாணவியை குறை சொல்றாங்க.... உங்க வீட்டு பெண்களுக்கு அந்த நிலைமை வந்தா "நீயி ஏம்மா அப்படி இருந்த ... அதனால்தானே இப்படி ஆச்சு?" ன்னு கேப்பீங்களோ ??


SUBRAMANIAN P
டிச 31, 2024 14:07

நீ அந்த சித்தார்த்தா?


karupanasamy
டிச 31, 2024 16:24

ஞ்ஞான சேகரனுக்கு கம்பெனி குடுக்க அனுப்பிவைக்கச்சொல்லு.


Kumar Kumzi
டிச 31, 2024 17:23

அட ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட உன் வீட்டுல இந்த சம்பவம் நடந்திருந்தால் இப்பிடி கருத்து எழுதுவியா


வாய்மையே வெல்லும்
டிச 31, 2024 21:43

கிறுக்கு மனநோயாளி போல பதிவு போட்ட சித்தார்த்துக்கு இருநூறு அழுகின தேங்காய் இலவசம்