உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை

மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஜன.,03) மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o17gsdf3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்நிலையில், இன்று (ஜன.,03) பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். தொண்டர்கள் மத்தியில் நடிகை குஷ்பூ பேசினார். பின்னர் போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பிறகு அவர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு கூறியதாவது: இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் தங்களை அடைத்து வைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் தொடரும்!

குஷ்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மீண்டும் கைது செய்யப்படுவதாக இருந்தாலும், நீதி, பெண்கள் பாதுகாப்புக்கான எங்கள் போராட்டம் தொடரும். இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை. நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தே தீர வேண்டும். அரசு நிர்வாகம் என்பது, உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது அல்ல. ஜனநாயகத்தை காலரைப்பிடித்து துாக்கி அவமதிப்பதை ஏற்க முடியாது எனக்கூறியுள்ளார்.

4 பிரிவுகளில் வழக்கு

மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றது தொடர்பாக குஷ்புனா உள்ளிட்ட314 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏன் தடுக்க வேண்டும்: குஷ்பூ கேள்வி

போராட்டம் துவங்குவதற்கு முன்னர் நிருபர்கள் சந்திப்பில் குஷ்பூ கூறியதாவது: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். பேரணிக்கு வர முயன்ற பெண்களை வீட்டு காவலில் வைக்கிறார்கள். பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் பற்றி பேசும்போது, ஜோதிமணி எம்.பி., யோசித்துப் பேச வேண்டும். பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பேரணிக்கு அனுமதி தரமாட்டார்கள் என்பது தெரியும்இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பா.ஜ., மகளிரணி சார்பாக நடந்த நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி, தேசியச் செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ., மகளிர் அணியினர் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 105 )

Priyan Vadanad
ஜன 04, 2025 00:45

இங்கு பதிவாகும் விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனங்களை பதிவிடாதீர்கள் நடுநிலையாளர்களே என்ன செய்தாலும் தமிழக மண்ணிலும் மனதிலும் இடம் பிடிக்க முடியவில்லையே என்கிற உணர்வு ஒரு கட்சிக்கு அதிகமாகவே சூட்டை கிளப்பி விட்டது. கொஞ்சம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். அந்த கண்ராவியை படித்து சிரித்து விட்டு ஒதுக்குங்கள், ஒதுங்குங்கள்.


Priyan Vadanad
ஜன 04, 2025 00:39

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இப்படி பத்தி பத்தியாய் எழுதி, அதை வியாபாரம் செய்து காசாக்கும் பத்திரிகைகள், சோசியல் மீடியாக்கள் இவர்கள் விளங்குவார்களா? அதென்ன நாய் வித்த காசு குறைக்கவா போகிறது?


Priyan Vadanad
ஜன 04, 2025 00:36

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாஜக நடத்தும் போராட்டங்கள் மிகவும் வேதனை தருவது இந்த படங்களுக்கு தெரியாதா? ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் வலி வேதனையை அதிகப்படுத்தி, அதில் அரசியலை கட்டமைக்கலாமா?


Priyan Vadanad
ஜன 04, 2025 00:30

பாதிக்கப்பட்ட பெண்ணை அனைத்து வழிகளிலும் கேவலப்படுத்த நவீன கண்ணகி புறப்பட்டுவிட்டாள். பெண்களை கேவலப்படுத்த பாஜக முன்னெடுக்கும் இந்தமாதிரியான கூட்டங்களுக்கு, அறிவாளிகளே பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்களே முக்கியத்துவம் தராதீர்கள்.


AMLA ASOKAN
ஜன 03, 2025 23:13

ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதை தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மூலம் பள்ளி, கல்லூரியில் படிக்கும்பொழுதே அவள் கற்றுக்கொண்டு விடுகிறாள். ஒரு அந்நிய ஆணுடன் எந்த அளவு உறவாட, பேச, சிரிக்க வேண்டும் என்பதையும் அவள் உணர்ந்து விடுகிறாள். பெற்றோரும் அவள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவள் ஒருவனை காதலிக்கிறாள் என்றாளே அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமிழக பெற்றோர்கள். இந்நிலையில் படிக்க அனுப்பிய தன் மகள் ஒரு வாலிபனுடன் இரவில் தனிமையில் உல்லாசத்தை விரும்பி சென்றுள்ளாள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 99% பெற்றோர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். மாறாக அவள் அப்பாவியாக, காதலிக்கத் தெரியாவளாக, உத்தமியாக, எந்த ஒரு மாணவனுடனும் பேசாதவளாக, பெற்றோர் பெயரை காப்பவளாக, இருந்து கற்பழிக்கப் பட்டிருந்தால் தமிழ் நாடே பொங்கியெழும். என் மகள், உன் மகள், என்பதை விட அவள் ஒரு நல்ல குடும்ப பெண்ணாக இருக்கவில்லை என்பது தான் கள யதார்த்தம்


சோலை பார்த்தி
ஜன 03, 2025 22:30

குடிநீரில் மல. கலந்த கள்வர்களையே மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத திராவிட மாடலா அந்த சார் ஐ யா கண்டுபிடிக்க போகுது


சோலை பார்த்தி
ஜன 03, 2025 22:18

தயவுசெய்து கருத்து தெரிவிப்பவர்கள் தனது குடும்ப பெண்ணிற்கு இப்படி நடந்து இருந்தால் எப்படி உணர்ச்சி பொங்கி இருப்பீர்களோ அதே போல் இந்த விசயத்திலும் கருத்து தெரிவித்து இருக்கவேண்டும்.. மகாத்மாகாந்தி அவர்கள் சொன்னது.. எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியில் சென்று வரமுடியுமோ அன்றுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அர்த்தம் என்றார்... இந்த திராவிஷ மாடல் ஆட்சியில் நடக்ககூடிய விசயமா யோசியுங்கள்...


Laddoo
ஜன 04, 2025 20:07

என்னங்க இப்படி கருத்த போட்டுடீங்க... கழுத்து நிறைய நகையை போட்டுக்கிட்டு கட்டு குடும்ப பெண்கள் நடு நிசியில் போனால் போலீசு ப்ரொடெக்ஷன் குடுப்பாங்க


AMLA ASOKAN
ஜன 03, 2025 21:37

2ஆம் தேதி முதல் யூனிவர்சிட்டி துவங்கி விட்டது . அந்த பொண்ணும் கல்லூரிக்கு போறாள் . குற்றவாளியும் சிறையிலே இருக்கான் . விசாரணை கமிஷன்கள் தீவிரமா பார்க்கிறாங்க . மக்களும் அவங்க வேலைய பார்க்கிறாங்க . நடந்து முடிந்து 10 நாள் ஆச்சு . இந்தியாவில் கொலை கொள்ளைக்கு பஞ்சமில்லை . ஆனால் இந்த நிகழ்வுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் , ஆரவாரம் , ஊர்வலம் , விமர்சனம் . நீதிபதியும் இது தேவையற்றதுனுட்டு சொல்லிட்டார் . அந்த பெண் தன் தலையில் அடித்து கொள்வாள் . அவள் பெயர் கெட்டது தான் மிச்சம் .


krishna
ஜன 03, 2025 22:50

EERA VENGAAYAM


பேசும் தமிழன்
ஜன 03, 2025 20:00

யார் அந்த சார்...... T-shirt ஆர்டர் பிச்சிக்கிட்டு போகும் போல இருக்கே ???


Sidharth
ஜன 03, 2025 19:06

நாடகம் முடிந்து விட்டது


முக்கிய வீடியோ