உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் பண்ணை தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!

பால் பண்ணை தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wv1ut312&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் 'We the Leaders'அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன். ஆம். கடந்த ஜூலை 12ம் தேதி விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10ம் தேதி காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, எனது பவர் ஆப் அட்டர்னி வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம். மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்.நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில்சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 113 )

P. SRINIVASAN
அக் 02, 2025 12:02

என்னவேண்டுமானாலும் தொடங்கலாம்


K.Ramakrishnan
செப் 29, 2025 18:59

நயினாரை எல்லோரும் பண்ணையார் என்று தான் நெல்லையில் அழைப்பார்கள். பால் பண்ணை துவங்கினால் இவரையும் இனி பண்ணையார் என்றே அழைப்பார்களாம். அதனால் தான் பால் பண்ணை துவக்கப் போகிறாராம். இனி ஆவினுக்கு போட்டியாக அண்ணாமலை பால்?


Raja
செப் 15, 2025 11:46

"எனது வீட்டு செலவுக்கும், வாடகைக்கும் எனது நண்பர்கள்தான் பணம் கொடுத்து உதவுகின்றனர்" என்று கூறினார். சென்ற பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் அபிடவிட்டில் இவர் காண்பித்த சொத்து, பணம் ஆகியவற்றுக்கும், தற்போது இவர் வாங்கி இருக்கும் சொத்துக்கும் சம்பந்தமேயில்லை. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது. உ.பிக்குத்தான் வெளிச்சம். இவரது மச்சினர் வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கான விளக்கம் ஏதுமில்லை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 14, 2025 05:51

அண்ணாமலை FILES ஐ பாஜாக்காவே வெளியே விட்டிருக்கு


Shivakumar
செப் 15, 2025 19:14

சரி பார்த்து படித்துவிட்டு கிழித்துவிடவும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:19

பெரு நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களின், உதாரணத்துக்கு கோவை காளப்பட்டி, அரசு மதிப்பீட்டிற்கும், உண்மை சந்தை மதிப்பிற்கும் குறைந்தபட்சம் ஐம்பது முதல் நூறு மடங்கு அவரு வித்தியாசம் இருக்கும். இது தான் நிதர்சனம். 40 லட்சம் பதிவு செலவுன்னா கிட்டத்தட்ட 4 கோடி வெள்ளைப்பணம். 200 முதல் 400 கோடி சொத்து, 190 கோடி முதல் 390 கோடி அவரு கருப்புப்பணம், ரொக்கம், சொத்து பரிமாற்றம், மிரட்டல் வழிமுறை அசுர வளர்ச்சி. வீழ்ச்சியும் இதே வகையில் தான் அமையும்.


VSMani
செப் 14, 2025 11:10

சரியாக சொன்னீர்கள். அண்ணாமலையும் ஊழல் பேர்வழிதான் போல.


Bala Paddy
செப் 15, 2025 16:01

Don’t write whatever comes to யுவர் மூளை. உன் குடும்பத்தையும் நினைத்து பார். நல்லவனை நிந்தித்தால் உன் குடும்பம் நாசமாகி விடும் .


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:07

லட்சம் லட்சம் வீட்டு வாடகை இப்பவும் நண்பர்கள் தானே கொடுக்கிறார்கள்? பழைய கதைஓடு இந்த புதிய கதை சரியா ஒட்ட மாட்டேங்குது, ஏன்?


Yuvaraj Velumani
செப் 14, 2025 12:15

உன்னை மாதிரி ஓசி சோறு சாப்பிட்டு தீவிரவாத கும்பலுக்கு ஜால்ரா போடும் ஆள் இல்லை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 19:50

அண்ணாமலை சினிமா படத்திலே ரஜினி பால் வித்து ஒரு பாட்டிலேயே ஆன ஆறு வருசத்திலே கோடீஸவரன் ஆவாப்புலே. ஆனா நிஜ வாழ்க்கையில் இந்த அண்ணாமலை நாலு வருட கேப்பிலேயே பலப்பல கோடிகளுக்கு சொத்தை சேர்த்துட்டு, இப்போ அதிலே மாடு வாங்கி பால் விக்கப் போறேன்னு சொல்கிறார்.


VSMani
செப் 14, 2025 11:13

வந்தேண்டா பால்காரன் அடடா இந்த அண்ணாமலை ஊழல் அண்ணாமலை என்பதை இப்போது பார்க்கப்போறாய்.


Abdul Rahim
செப் 13, 2025 15:44

மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கிரானைட் குவாரிகளில் மற்றும்ம் மணல் காண்டிராக்டர்களிடம் அண்ணாமலை அடித்த கமிஷன் கொள்ளையை பற்றி சில ஆண்டுகளாகவே எழுதி இருகிறேன் அப்பதெல்லாம் இந்த பாஜ அடிமைகள் என்னவெல்லாம் என்னை தூற்றி எழுதினார்கள் இப்போது உங்க முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள் ?????


Murugesan
செப் 13, 2025 17:21

மண்டையில அறிவில்லாத சில திராவிட ரபால்டாயில் தற்குறி அயோக்கியனுங்க அடிமை 200 ரூ அதிமாக கூவுது ஆதாரத்தை வைத்து பேசு அமைதி மார்க்கமே


Yuvaraj Velumani
செப் 14, 2025 12:16

ஏன் நீங்க பண்ணாத கேப்புமாரி தனம் இந்த உலகில் உண்டோ


Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 09:35

பிஜேபி யே ஆட்சிக்கு வந்தாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சொத்து சேர்த்த வகையில் உள்ளே போவது உறுதி ஏனெனில் அணைத்து பிஜேபி தலைவர்களும் கடுப்பில் உள்ளார்கள்.


Abdul Rahim
செப் 14, 2025 13:54

2 ரூவாய்க்கு மாஞ்சு மாஞ்சு வாந்தி எடுக்கும் கமலாலய அடிமைக்கு ரோஷம் பொத்துகிட்டு வருதோ


Padmasridharan
செப் 13, 2025 08:55

சந்திர பாபு அவர்கள் நடத்தும் பால் வியாபார வழியில் செல்கிறாரா சாமி. .


புதிய வீடியோ