உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசை கண்டித்து போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை

தமிழக அரசை கண்டித்து போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை

சென்னை: 'தி.மு.க., அரசை கண்டித்து நாளை (மார்ச் 22) காலை 10 மணிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sf6fuzlt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விளம்பர ஷூட்டிங்

ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இண்டி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

நீட் எதிர்ப்பு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி, கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடகத்தில் பங்கேற்க தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி முக்கியம்

டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால், கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இண்டி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது அவருக்கு. மேகதாது அணை, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று, பிரதமர் மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும், மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை, அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதல்வர் சிவக்குமாருக்கு தான் வாழிய பாடி வரவேற்கிறது தி.மு.க.,

சாதித்தது என்ன?

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. இது தவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

கருப்புக் கொடி

அரிசி, பருப்பு, காய்கறிகள் என, தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது, மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும் தான். தனது இண்டி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலினை கண்டித்து, நாளை த.மி.ழ.க., பா.ஜ., சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.பா.ஜ.,வினர் அனைவரும், நாளை (மார்ச் 22) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று. தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rathinam Karthikeyan
மார் 23, 2025 07:15

அரசு விமானத்தில் தனியாக அதானியை அழைத்துச் சென்றதை கேட்க துப்பில்லை ...


என்றும் இந்தியன்
மார் 21, 2025 17:46

அண்ணாமலை கைது??? என்ன ஆச்சு???அதுக்குள்ளே வெளியே வந்தாச்சா???


Bala
மார் 21, 2025 19:15

அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி ? இதைவிட இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு. நம்ம விடியல் அமைச்சரவை ஆட்கள் திஹார் சிறைக்கு போவதற்கு முப்பது நாட்களில் இந்தி என்ற புத்தகம் வாங்கிட்டு ரெடி ஆயிட்டாய்ங்க


Rajarajan
மார் 21, 2025 17:45

நீங்க பாட்டுக்கு போராட்டம் அறிவிக்கறீங்க. எதிர் தரப்பு என்னடானா, ராத்திரியோட ராத்திரியா உங்க டெல்லி மேலிடத்தை பார்த்து வேலைய கச்சிதமா முடிச்சிட்டு, காலைல பால் பாக்கெட் போடறதுக்குள்ள, வீட்டுக்கு திரும்பி வந்துடறாங்க. என்ன சார் இதெல்லாம் ?? நீங்க பரிதாபமா ?? இல்லை நாங்களா ??


Mario
மார் 21, 2025 16:56

பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


sankarkumar
மார் 21, 2025 18:01

டாஸ்மாக் ஊழல் நல்லது அப்படித்தானே 200 ஊப்பிஸ்


Bala
மார் 21, 2025 16:53

தமிழகத்தில் தினம் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் தொல்லை, கஞ்சா வியாபாரம் போன்ற சமூக அவலங்களை கண்டு மக்கள் கடும் கோவத்தில் இருக்கும்போது அதை மடை மாற்ற திமுக தன்னுடைய கொத்தடிமை மீடியாக்களை வைத்து தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களிடையே தேவையில்லாத ஒரு பரப்புரை செய்து தேவையில்லாமல் கூட்டம் நடத்துகிறது. அப்படி ஒரு பிரச்சனையே எங்கும் இல்லை. இதெல்லாம் தமிழக மக்களை பற்றி எரியும் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் செயல் . இதற்கு புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் அப்பட்டமாக துணைபோகின்றன. இத்தகைய அடிமை ஊடகங்கள் தமிழக மக்களிடையே பரப்பும் அறமற்ற செய்திகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலும் அவசியமில்லாத அதிமுக உள்விவகாரங்களை பற்றிய விவாதங்கள். தமிழக மக்களின் கோவத்தை பிரதிபலிக்காத ஊடகங்கள் அந்தோ பரிதாபம் திமுகவின் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது


Jayakumar S
மார் 21, 2025 16:19

ஜோக்கர் மாதிரி இருக்கு உங்கள் message


Bala
மார் 21, 2025 16:42

யாரை சொல்லறீங்க ?


SUBRAMANIAN P
மார் 21, 2025 15:58

அண்ணாமல நீ வேஸ்டு யா.. ஏதாவது பெருசா நடக்கும்னு பாத்தா, சும்மா சப்ப பிலிமா காட்டிகிட்டு இருக்க.. இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருக்கலாம் 10 வருஷத்துக்கு முன்ன பாஜக தமிழ்நாட்டுல எப்படி இருந்ததோ அப்படி.


Oviya Vijay
மார் 21, 2025 15:41

உங்க வீட்டுக்குரிய வாடகை பிரண்ட்ஸ் தந்திடுறாங்க... சாப்பாட்டுக்கும் கட்சி செலவுல வயித்த ரொப்பிக்குவீங்க... பாவம்... உங்களுக்கும் பொழுது போகணும்லயா... அப்போ அப்போ போராட்டம் ஆர்ப்பாட்டம் அப்படின்னு அறிவிச்சா தான உங்களுக்கும் பொழப்பு ஓடும்... உங்கள சுத்தி இருக்குற கோமாளிக் கூட்டத்துக்கும் ஜாலியா இருக்கும்... ஆனா எது பண்றதா இருந்தாலும் மக்களுக்கு தொந்தரவு இல்லாம இடைஞ்சல் பண்ணாம பண்ணுங்க... இல்லைன்னா எச் ராஜா சொன்ன மாதிரி திரும்பவும் நாய் புடிக்குற வண்டியில உங்க எல்லாரையும் புடிச்சிட்டு போக வேண்டியதாயிரும்... அப்புறம் 5:30 மணி ஆனவுடன வீட்டுக்கு போகணும்னு ஸ்கூலுக்கு போற சின்ன புள்ள மாதிரி அழுவ கூடாது... பார்த்து சூதானமா நடந்துக்கோங்க...


Madras Madra
மார் 21, 2025 15:52

இன்னிக்கு நம்ம பொழப்பு ஓடிடும் நன்றி அண்ணாமலை


Bala
மார் 21, 2025 16:41

ஓங்கோலிலுருந்து வந்த ஒருத்தருக்கு ஜால்ரா அடிக்கும் கூஜா தூக்கும் குடும்ப கொத்தடிமை உனக்கே அவ்வளவு அதுப்பு இருந்தா, வீரம் மிக்க மெத்த படித்த நேர்மையான IPS அதிகாரியா இருந்து இன்றைக்கு உலகத்தின் மிகப்பெரிய கட்சியான பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் நாளைய முதல்வர் இளம் வீர தமிழன் திரு அண்ணாமலை அவர்களை ஆதரிக்கும் என்போன்றவர்களுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கோணும்? எங்கள் தலைவருக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். ஓங்கோலருக்கு கோடி கோடியாய் தமிழக மக்களை சுரண்டி கொள்ளையடித்த பணம் இருக்கு என்ற திமிரில் ஆட்டம்போடுகிறார். காலம் மாறும். தமிழக மக்கள் 2026 தேர்தலில் திமுகவை மண்ணை கவ்வ வைப்பார்கள். இது உறுதி


பாமரன்
மார் 21, 2025 15:04

யாருக்குயா கருப்பு பூச்சாண்டி காட்ட போறீங்க...


Oviya Vijay
மார் 21, 2025 14:47

வேற என்னையா உங்களுக்கு வேலை இருக்கு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை