உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

அமைச்சரின் பகுத்தறிவு பேச்சு விளாசுகிறார் அண்ணாமலை

சென்னை: 'கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கை பணத்தையும் சுரண்டி கொண்டிருக்கும் கூட்டம், இன்று மக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை எனக் கூறும் அளவுக்கு கொழுத்து போயிருக்கிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் நெரிசலால் ஏற்பட்ட விபத்து குறித்து கேட்ட கேள்விக்கு, 'கோவில் திருவிழாக்களுக்கு அதிக கூட்டம் செல்வது, விளையாட்டை பார்க்க அதிக கூட்டம் செல்வது, நாகரிகமான சமூகத்திற்கு ஒரு அடையாளமாக என்னால் பார்க்க முடியவில்லை' என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.அதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாக தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, 'மக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது' என, அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து உள்ளார்.கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் உண்டியல் பணத்தையும் சுரண்டி கொண்டிருக்கும் கூட்டம், இன்று மக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்றும் கூறும் அளவுக்கு கொழுத்து போயிருக்கிறது.எது நாகரிகம்.தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பாலில் இருந்து கொழுப்பு சத்தைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா?'இண்டி' கூட்டணி கட்சியின் நிர்வாக தோல்வியை மறைக்க, மக்கள் கூட்டமாக கோவில் திருவிழாவுக்கு செல்லக்கூடாது எனக் கூறும் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளை கூட்டி கூட்டம் போடும் தன் கட்சி தலைவரிடம் இப்படி சொல்வாரா?தமிழகத்தில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும், போதை பொருளும் ஆறாக ஓடிக் கொண்டிக்கின்றன. கொலை நடக்காத நாளே இல்லை என்றளவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், அமைச்சர் பகுத்தறிவு பேசுகிறாராம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

J Vensuslaus
ஜூன் 13, 2025 12:19

மக்களுக்கு தேவை பகுத்தறிவு, காட்டுமிராண்டித்தனம் அல்ல. அமைச்சர் கருத்து சரி. அண்ணாமலை எண்ணங்கள் காட்டுமிராண்டிகளை உருவாக்கும்.


J Vensuslaus
ஜூன் 13, 2025 10:07

அமைச்சரின் கருத்து சரியானதே. அண்ணாமலைக்கு புரியவில்லை.


Bhaskaran
ஜூன் 10, 2025 20:58

அந்த தத்தி இது மாதிரி பேசலேன்னாதான் அதிசயம்


Krishnaswame Krishnaswame
ஜூன் 06, 2025 19:01

அவன் பாவடை கூட்டத்த சேந்தவன்.அவன் அப்படித்தான் பேசுவான்


உ.பி
ஜூன் 06, 2025 15:15

அதாவது மதுரை மாநாட்டுக்கு வந்த உ.பிங்க எல்லாம் நாகரிகம் இல்லாதவங்கனு சொல்ராரு


Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:20

சரி, நாளைக்கு அந்த அமைச்சர் மண்டையைப்போட்டால் யாரும் கும்பலாக போகாதீர்கள்.


A THENDRAL VAIRAVAN
ஜூன் 06, 2025 09:44

ஆக, கட்சி மாநாட்டில் கூட்டம் சேர்ந்தால்/சேர்த்தால் அது நாகரீக திராவிட மாடல். கோவிலில் கூட்டம் சேர்ந்தால் அது அநாகரீகம். திராவிட மாடல் ஆட்சியில் இப்படித்தான் பேசுவாங்க நாம்தானே தேர்ந்தெடுத்தோம். வாக்களிக்கும்போது சிந்திக்காததால் வந்த விளைவு. இந்துக்களே, வரும் தேர்தலிலும் சிந்திக்காமல் வாக்களித்தால் கோவிலே இல்லாமல் செய்து விடுவார்கள். கோவில் இருந்தாத்தானே திருவிழா நடக்கும் கூட்டம் சேரும். திருந்துங்கள் மக்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை