உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை முதல்வரா? நடக்காத விஷயம்

அண்ணாமலை முதல்வரா? நடக்காத விஷயம்

சென்னை:''அண்ணாமலை முதல்வராவது நடக்காத விஷயம்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தற்போதைய படங்களில், சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள், சமூகத்தை சீரழிக்கின்ற கருத்துக்கள், இடம் பெறுகின்றன. பணத்துக்காக சமுதாயம் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று பலரும் நடிக்கின்றனர். ஆனால், 'பணம் முக்கியமல்ல; நல்ல கருத்துக்களை படத்தில் சொல்லுவேன்' எனக் கூறி நடித்தவர் எம்.ஜி.ஆர்., ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்., மட்டும்தான்.எம்.ஜி.ஆர்., உலக அளவில் போற்றப்படக் கூடியவர். அவருக்கு பிரதமர் வாழ்த்து கூறியது நல்ல விஷயம் தான். அதற்கும், கூட்டணிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என, பொதுச்செயலர் பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார்.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, விருப்பப்பட்டவர்கள் செல்லலாம். இறைவன் எங்கும் இருக்கிறார். அன்பு, நன்றி, கருணை உள்ளவர்களிடம் கடவுள் கட்டாயம் இருப்பார். இதை நான் பின்பற்றுகிறேன். இதை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நான் செல்லவில்லை. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அரசியல் ரீதியானதா, பக்தி ரீதியானதா என்பதை ஓட்டுப் போடும் மக்களே தீர்மானிக்கட்டும். தமிழர் என்றாலே காதலும், வீரமும் தான். ஜல்லிக்கட்டு வீரத்தின் சின்னம். காளை மாட்டை அழைத்து வாருங்கள்; அடக்கி காட்டுகிறேன்.அண்ணாமலை முதல்வர் என்பது இலவு காத்த கிளி கதை தான். தமிழகத்தை பொறுத்தவரை, 2026ல், அ.தி.மு.க., ஆட்சி பழனிசாமி தலைமையில் கட்டாயம் மலரும். இது எழுதப்பட்ட விதி. குருமூர்த்தி, ரஜினி போன்ற யார் சொன்னாலும் அண்ணாமலை முதல்வர் ஆவது என்பது நடக்காத விஷயம். இரட்டை இலை துளிர்த்து பசுமையாக உள்ளது. அதனிடம் எதுவும் ஈடுபடாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி