உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு; அண்ணாமலை கண்டனம்!

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு; அண்ணாமலை கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது' என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10ம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் போலீசார், இதுவரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை. மாறாக, மாணவி போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்களை, தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தி.மு.க., அரசின் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sampath, k
மே 21, 2025 19:25

Certain politicians in all parties, no norms, are involved in sexial activities in the powerful political background.


joe
மே 21, 2025 19:11

அரசியலை வியாபாரமாக செய்யும் இந்த ஸ்டாலினும் தி மு க என்ற ஊழல்வாதிகளும் இன்னும் கீழ்த்தரமாக அரசியலை வியாபாரம் செய்வானுக ,இது உங்களுக்கு தெரியவில்லையா .?தோண்ட தோண்ட இந்த கபோதி அரசியல் ஊழலும் செயலும் மானங்கெட்ட அரசியலே .இதுதான் தமிழகம் . புரிந்திருக்கும் தி முக வினர் இப்படியும் அரசியல் செய்யுறானுக...


nagendhiran
மே 21, 2025 18:49

ராமசாமி சொன்னதில் இது உண்மைதான் போல?


Priyan Vadanad
மே 21, 2025 18:42

மலையாருக்கு இன்னுமா பத்திரிக்கை செய்திகளில் இடம் கிடைக்கிறது? மச்சம்தான்.


vivek
மே 22, 2025 08:45

நீதிமன்றம் தடை உத்தரவு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை