உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவமரியாதை செய்திருக்கிறார் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xl1gjfzj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் தா. மோ. அன்பரசன், தாமதமாக கலந்து கொண்டதோடு, மின்சாரம் தடைபட்டதால், மாணவ மாணவியரை சுமார் 1 மணி நேரம் காத்திருக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார். அமைச்சர் தா. மோ. அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்பது, ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது. தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

KARTHIK PONNUMANI
ஜூன் 03, 2025 19:08

இது திமுக அரசு. தேசிய கொடி தலைகீழாக தான் இருக்கும். மக்கள் தலையெழுத்தே தலைகீழாக மாற்றும் கட்சி தேசியக் கொடி பற்றி தெரியுமா என்ன. இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி வந்தால் கச்சத்தீவு எப்படி இலங்கைக்கு வியாபாரம் ஆனதோ அது போல தமிழ்நாடையே விற்று விடுவர். தமிழினப் படுகொலை கண்டுகொள்ளாத வழுக்கை தலை தலைவர் வாரிசு தமிழ் தமிழ் என்று பேசுவார் .ஆனால் தன் பெயரை வடமொழி எழுத்தில் ஸ என்று தொடங்கி ஊரை ஏமாற்றும் திருட்டு குடும்பம்


Pascal
ஜூன் 03, 2025 12:27

கண்டதையும் உளறியிருக்கிறீர். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொடி கட்டியவர் தவறுதலாக கட்டியிருப்பார். இதற்கு போய் ஒரு அறிக்கை.


RajendraK
ஜூன் 03, 2025 13:35

சும்மா பந்தா விளம்பரத்துக்கு வந்து போகும் விடியா அமைச்சர்களுக்கு மரியாதை, மக்களை பற்றிய கவலை


S Saravanamuthu
ஜூன் 03, 2025 12:19

எஸ்


George selvanathan
ஜூன் 03, 2025 10:26

துரதிர்ஷ்டவசமான நாட்டில் பலருக்குத் தெரியும் ???


Raj
ஜூன் 03, 2025 09:09

அமைச்சர்தான் கொடி கட்டிட்டு அவரே கொடி ஏத்துன மாதிரி பேசுற. ஆடுங்குறது சரியாத்தான் இருக்கு. அறிவில்ல.


V Gandhi Rajan
ஜூன் 03, 2025 08:49

Dont joke Rasaaa. You will be prosecuted. Dont you have any sense. Its a National Flag. Minister is an uneducated fellow. How about you.


rasaa
ஜூன் 03, 2025 08:15

தலைகீழாக நின்று பாருங்கள். எல்லாம் சரியாக தெரியும்.


RajendraK
ஜூன் 03, 2025 13:38

இந்த மாதிரி ஆட்களை தலைகீழாகத் தான் கட்டி தொங்க விட வேண்டும்.


R.RAMACHANDRAN
ஜூன் 03, 2025 07:23

போதையில் கொடியேற்றி இருப்பர். நாட்டில் எத்தனையோ அவலங்களால் மத்திய மாநில அரசு ஊழியர்களால் மக்கள் திண்டாடி கொண்டிருக்க தேச பக்தி உள்ளவர்களாக நடிப்பவர்கள் வாக்கு வங்கிக்காக எதை எதையோ பெரிது படுத்திக் கொண்டுள்ளனர் இந்நாட்டில்.


Mohamed Ibrahim
ஜூன் 02, 2025 22:19

நாக்பூர் அலுவலகத்தில் தேசிய கொடியை புறக்கணித்து தேசிய கொடியை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தேசிய கொடியை பற்றி கருத்து தெரிவிப்பது காலத்தின் சாபக்கேடு.. நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக வா


kamal 00
ஜூன் 03, 2025 08:06

இங்க பேசுங்க.... நாக்குபூருக்கு போய்ட்டானுக.... தமிழ்நாட்டுல குத்தம் சொன்னா அமெரிக்கா வை சொல்லும் கூமுட்டை கொத்தடிமை


chandrakumar
ஜூன் 02, 2025 21:49

மொத்தத்தில் திராவிடம் என்றாலே கோமாளி கூட்டம்... தமிழனின் சாபக்கேடு திராவிட திருடன்கள் கூட்டம்.....


புதிய வீடியோ