உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியின், பெண்கள் தொடர்பான அருவக்கத்தக்க பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனமும் வலுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3o6yzzkj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன அறிக்கை:இது தான் தி.மு.க.,வின் அரசியல் நிலை. பொன்முடி ஒரு காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர். இப்போது வனம் மற்றும் காதித்துறை அமைச்சர். இந்த சாக்கடையை இன்றைய இளைஞர்கள் சகித்துக்கொள்ள வேண்டுமா?இந்த அமைச்சர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தி.மு.க.,வும் வக்கிரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்கதை பேசக்கூடியவர்களே. இத்தகைய இழிசொல் பேசும் கூட்டத்துக்கு தலைமை வகிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலை குனிய வேண்டும்.பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் இதை கடந்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் தவறு செய்வதாகவே அர்த்தம். ஹிந்து தர்மம் (சைவம், வைணவம்) மீது தி.மு.க., நடத்தும் இடைவிடாத தாக்குதலுக்கு பதிலடி கிடைத்தே தீரும். எங்கள் அமைதியை பலவீனம் என்று எண்ணிக்கொள்ள தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vijai hindu
ஏப் 11, 2025 23:47

உண்மையான இந்துகலா இருந்தா வருகிற தேர்தலில் பொன்முடியை டெபாசிட் இழக்க வேண்டும்


rasaa
ஏப் 11, 2025 22:08

தி.மு.க.வில் உள்ள இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 11, 2025 20:53

அவருக்கு வோட்டு போட்ட எல்லா திமுக காரர்களுக்கும் , பொன்முடியின் வார்த்தை பொருந்துமா?


Thetamilan
ஏப் 11, 2025 19:27

புல்லுருவிகள்


Murugaiah Sivalingam
ஏப் 11, 2025 16:54

திரு. அண்ணாமலை ஒரு அருமையான அரசியல் வித்தகர், தமிழக வெற்றி கலக தலைவர் விஜய் அவர்கள் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொன்டு அரசியல் செய்கிறார் என்று பேசியவர்தானே????


vijai hindu
ஏப் 11, 2025 23:46

உண்மையைத்தான் அண்ணாமலை சொன்னார்


TR BALACHANDER
ஏப் 11, 2025 15:21

மானம் ,வெட்கம் ,சுடு ,சுரணை இருந்தால் இது போல் கீழ் தரமாக பேசுவதை கண்டித்து அணைத்து மத மக்களும் வீதியில் வந்து போராடவேண்டும் .......பொன்முடி ஐயா உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறீங்களா ???????


Oru Indiyan
ஏப் 11, 2025 14:32

ஹிந்துக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடறாங்களா..


sridhar
ஏப் 11, 2025 13:22

உண்மையில் ஹிந்து மதத்தை கேவலமாக பேசியதற்கு திமுகவில் யாரும் வருத்தமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை , தலைமை உட்பட . திமுகவுக்கு வாக்களிக்கும் அறிவிலி ஹிந்துக்களுக்கு சமர்ப்பணம்.


Subramanian N
ஏப் 11, 2025 13:16

. இவரை வளர்த்த இவரின் பெற்றோர்கள் என்ன பாவம் செய்தார்களோ


Barakat Ali
ஏப் 11, 2025 13:22

நீங்க அண்ணாமலையைச் சொல்றீங்களா அல்லது பொன்முடியைச் சொல்றீங்களா ????


பெரிய ராசு
ஏப் 11, 2025 12:48

இவனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் வெக்கி தலைகுனிந்து...


Rangarajan Cv
ஏப் 11, 2025 14:25

Including his family members will be ashamed of this minister's talk. Third rated .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை