உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உதவி கோரிய அவரின் அலறலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவிக்க, அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது, போதைப்பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024க்கு இடையில், தமிழகத்தில் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே. 2021ல் (ஒரு வருடத்தில்) NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் மெத்தாம்பெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகளின் எண்ணிக்கை குறைகிறதே எப்படி? போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட வைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகி விட்டதா? பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

sridhar
பிப் 05, 2025 18:33

என்ன சார் இப்படி பொங்குறீங்க . திமுக ஆட்சிக்கு வந்ததன் நோக்கத்தை தானே நிறைவேற்றுகிறார்கள் .


Svs Yaadum oore
பிப் 05, 2025 17:49

எப்போதும் மணிப்பூருக்கு போராடும் தூத்துக்குடி விடியல் திராவிட அக்கா , இந்த கிளம்பாக்கம் சம்பவத்தை கண்டித்து கவர்னரை எதிர்த்து அண்ணா சாலையில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ...


Indian
பிப் 05, 2025 17:22

சட்டம் , சரியில்லை , தண்டனை தரவில்லை ,


Rajarajan
பிப் 05, 2025 15:39

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் ராமசாமிக்கே.


pmsamy
பிப் 05, 2025 15:34

அண்ணாமலை நீ பாஜக தலைவராய் இருந்தும் இவ்வளவு குற்றம் நடக்குது நீ வேஸ்ட்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 14:43

போதைப் பொருட்கள் குஜராத் துறைமுகம் வழியாகத் தான் இந்தியாவுக்குள் வருகிறது என்று ஒன்றிய பாஜக அரசின் NPC அறிக்கை சமர்ப்பித்ததை அண்ணாமலை பார்க்கவில்லை போலிருக்கிறது, பாவம்.


Svs Yaadum oore
பிப் 05, 2025 16:47

மணிப்பூருக்கு போராடும் விடியல் திராவிட அக்கா இந்த கிளம்பாக்கம் சம்பவத்தை கண்டித்து கவர்னரை எதிர்த்து அண்ணா சாலையில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ...


vivek
பிப் 05, 2025 17:44

அந்த டாஸ்மாக் பழைய பாட்டில் காண்ட்ராக்ட் நம்ம குண்டம் கிட்ட குடுதிடலாம்


என்றும் இந்தியன்
பிப் 05, 2025 18:13

பாகிஸ்தானிலிருந்து குஜராத் வழியாக டாஸ்மாக்கினாட்டுக்கு திருட்டு திராவிட குரூப்புக்கு வந்து அவர்கள் மூலமாக டாஸ்மாக்கினாடு பூராவும் பரவுகின்றது போதை பொருட்கள் என்பது தெள்ளத்தெளிந்த உண்மை விரிவாக்கம்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 14:41

நெஞ்சில் அடிச்சுக்கிட்டு கதறுவது போன்ற போஸ் சூப்பர். ஆனா அண்ணாமலை, இது நடிப்பு என்று எல்லாருக்கும் தெரியும். என்னிக்கு பாஜக விற்கு நாலு எம் எல் ஏ சீட் கிடைக்கும் நிலை வந்ததோ அன்றிலிருந்து தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளையும் விரைந்து கண்டுபிடித்து விடுகிறது என்பதால் அண்ணா மலை பதறுகிற மாதிரி போட்டோ சூப்பர்.


SUBRAMANIAN P
பிப் 05, 2025 13:54

மானம் ரோஷம் உள்ள படித்த, படிக்காத, ஏழை, பணக்கார, பெண்கள் தயவு செய்து திமுக ஆட்சி முடிவுக்கு வரும் வரை தக்க பாதுகாப்பு இல்லாமல் வெளியில் எங்கும் செல்லாதீர்கள்.. எப்போது எங்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் இருக்கிறது.. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தால் இதே நிலையை தொடரவும்..


Narayanan Muthu
பிப் 05, 2025 13:49

அண்ணாமலை குளிர் காய இன்னொரு சம்பவம். இதை வைத்து இன்றைய பொழுதை ஒட்டிவிடுவார். வேறொன்றும் செய்ய போவதில்லை. வேண்டுமானால் இன்னொருமுறை சாட்டையால் அடித்து கொள்ளலாம்.


Gopinathan S
பிப் 05, 2025 13:09

ஜல்லிக்கட்டை மீட்க ஒரு கூட்டம் கூடியது. ஆனால் பாழாய் போன இந்த சாராயத்தை தடை செய்ய கோரி போராட்டம் செய்ய முடியாது. ஏனெனில் முக்கால்வாசி மக்களை குடிகாரர்களாக மாற்றி மூளை சலவை செய்து விட்டன ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள்.


முக்கிய வீடியோ