உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை தான் பா.ஜ.,வின் சிறந்த மாநில தலைவர்: தினகரன்

அண்ணாமலை தான் பா.ஜ.,வின் சிறந்த மாநில தலைவர்: தினகரன்

பரமக்குடி: “அண்ணாமலை தான், பா.ஜ.,வின் சிறந்த மாநிலத் தலைவராக பணியாற்றினார்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இதுவரை, 200 தொகுதிகளில், கட்சி கூட்டங்களை நடத்தி உள்ளோம். விரைவில் தேர்தல் பணியை துவக்க உள்ளோம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில், நாங்கள் உள்ளோமா என்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தான் சொல்ல வேண்டும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், 'நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, இந்தியா சிறந்த வல்லரசு நாடாக மாறும்' என்ற நோக்கத்தில் நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். தொடர்ந்து, அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். பிரதமரை சந்திக்க வேண்டும் என்றால், டில்லிக்குச் சென்று சந்திப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அண்ணாமலை தான், பா.ஜ.,வின் சிறந்த மாநிலத் தலைவராக பணியாற்றினார். தற்போது, அவர் பழனிசாமியை ஆதரித்து பேசுகிறார். அது, தேசிய தலைமையின் நிர்ப்பந்தமாக இருக்கலாம். மின்னணு ஓட்டுப்பதிவு மிஷினில் தவறு நடக்க வாய்ப்பில்லை என, காங்., கட்சியைச் சேர்ந்த எம்.பி., கார்த்தி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அக்கட்சியின் தலைவர்கள் வேறு நிலைப்பாட்டில் உள்ளனர். முதல்வரின் வெளிநாடு பயணம் தொழில் வளர்ச்சிக்கானதா என்பதை, அவரது பயணம் முடிந்த பின் தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ