உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி புறப்பட்டார் அண்ணாமலை; அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

டில்லி புறப்பட்டார் அண்ணாமலை; அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று டில்லி புறப்பட்டு சென்றுள்ளார்.சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திடீரென டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, தமிழக அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uy5vrjlt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சந்திப்பை தொடர்ந்து, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைய இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களும் இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

venugopal s
மார் 27, 2025 18:14

வாயைப் பொத்திக் கொண்டு,வாலை சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இரு, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்து விடாதே என்று எச்சரிப்பதற்காக கூப்பிட்டு இருப்பாரோ?


Madras Madra
மார் 27, 2025 13:45

2023 ல் அரசியலில் நுழைந்து இன்று இவ்வளவு முக்கியமான அரசியல் தலைவராக அண்ணாமலை அவர்கள் உருவானது பல திராவிடயர்களுக்கு எரிகிறது வழக்கம் போல வசை பாடி அரிப்பை தீர்த்து கொள்கின்றனர் அண்ணாமலை இனி தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி மக்கள் அவரை முதல்வராக பார்க்க விரும்புகின்றனர் இதையும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்


Madras Madra
மார் 27, 2025 12:53

உபிக்கள் கதறல் அதிகமாக இருப்பதை பார்த்தால் கூட்டணி பார்த்து பயம் வந்துருச்சு போல


Rajathi Rajan
மார் 27, 2025 11:17

அதிமுக உடேன கூட்டணி வைத்தால் தலைவர் பதவிய ராஜினாமா செய்வேன் - இப்படி அண்ணாமலை??? இப்ப பதவி போய்டுமுனு பயபுள்ள சிட்ட பறக்குது டெல்லிக்கு? மானம் உள்ள மனிதனுக்கு......... சொல்ல தேவை இல்லை,


மூர்க்கன்
மார் 27, 2025 10:59

ஆண்டிகள் கூடி மடம் கட்டுகிறார்கள் ... இப்பல்லாம் ஆண்டிகளிடம் தான் செம சில்லறை இருக்கு.. இந்த அண்ணாமலையால அம்மன்சல்லிக்கு பிரயோசனமில்லை கட்சிக்கு??


sribalajitraders
மார் 27, 2025 10:46

பாஜகவின் பல மசோதாக்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு அதிமுக ஆதரவு தெரிவித்ததன் விளைவாக அதிமுகவின் இமேஜ் சரிந்துவிட்டது. மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் துணிச்சலை அதிமுக இழந்துவிட்டது


ஆரூர் ரங்
மார் 27, 2025 11:09

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஏற்கும் சட்டத்தை திமுக ஆதரித்து வாக்களித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறு வணிகர்கள் சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் திமுக வுக்கே வாக்களிக்கின்றனர்.


sribalajitraders
மார் 27, 2025 10:45

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிமுகவை விட்டால் வேறு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சவலைப் பிள்ளையாக இருக்கிறது பாஜக. அதை தூக்கிச் சுமப்பதற்கான தோள்கள் அதிமுகவிடம் இருக்கிறது. அதிமுகவின் கட்டமைப்பு, தொண்டர்கள் பலம் அசாதாரணமானது


M R Radha
மார் 27, 2025 16:23

அவங்க பிரச்னையை அவங்க பாத்துப்பாங்க. 200ரூவா இன்னிக்கு வந்துச்சா? ஊசிப்போன பிரியாணி மற்றும் டூப்ளிகேட் குவாட்டர்...


MP.K
மார் 27, 2025 10:42

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு முழுமையாக இருக்கும் போது, அரசியல் களத்தில் நாடகங்கள் அரங்கேறும்


karupanasamy
மார் 27, 2025 10:30

தீயமுக கூட்டத்தை ஆட்சியிலிருந்து அகற்ற வேறுபாடுகள், மனக்கசப்புகள், சண்டைகள் சச்சரவுகளை மறந்து தீயமுக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்கிற ஒரே நல்ல குறிக்கோளுக்காக அதிமுகவும் பாஜகவும் இணைந்து பணியாற்றவேண்டும்.


अप्पावी
மார் 27, 2025 10:19

வழக்கமா டில்லி கெளம்பறதுக்கு முன்னே ஏர்போர்ட்டில் நிருபர்களை வெச்சு விலாவாரியா பேட்டி குடுப்பாரே....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை