உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை மீது வழக்குப்பதிய அனுமதிக்கவில்லை: கவர்னர் விளக்கம்

அண்ணாமலை மீது வழக்குப்பதிய அனுமதிக்கவில்லை: கவர்னர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g4x20usx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அவர் கட்டுக் கதைகளை கூறி, மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும், அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்கு விசாரணை நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், 'அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிய வேண்டும் என்பதால், அரசின் அனுமதியை பெற வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதற்கிடையே அண்ணாமலை மீது வழக்குப்பதிய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியானது.இது தொடர்பாக கவர்னர் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கம்: அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கவர்னர் மாளிகைக்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து கவர்னர் மாளிகை எநு்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. இது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சிதாரா
மே 14, 2024 07:24

இத்தனை நாள் இருந்த எழுச்சி, பேச்செல்லாம்.இப்போ காணோம் பாத்தீங்களா. தேர்தல் பிரச்சாரம் முடிஞ்சிருச்சு.


Azar Mufeen
மே 13, 2024 23:07

அய்யா தயவு செய்து கைது செய்துவிடாதீர்கள். அரசியல் களத்தில் இவர் ஒரு செந்தில் மாதிரி அப்புறம் ரெண்டு டிகிரி செல்சியஸ் ஒரு லட்சம் வாக்காளர்கள் பேர் மாயம் போன்ற காமெடி கூற ஆள் கிடைக்காது


Sakthi,sivagangai
மே 14, 2024 06:19

மூர்க்கன்களுக்கு எல்லாம் அண்ணாமலை என்ற பெயரை கேட்டவுடன் அடிவயிறு கலங்குகிறது...?


Rohan
மே 13, 2024 20:27

அப்ப இந்த திருட்டு முன்னேற்ற கழகம் அந்தணர்களை பற்றி அவதூறு பேசியதற்கும் எங்கள் மத குருமார்களை அவ்மதித்தர்க்கும் யார் மீது வழக்கு போடுவது அதை சொல்லட்டும் முதலில்


ராம்கி
மே 13, 2024 20:22

ஆக கழக கண்மணிகள் வழக்கம்போல பொய் தகவல் கசிய விட்டு மக்களை குழப்பிவிட முயற்சி தப்பித் தவறி அண்ணாமலையை கைது செய்தால் கழக ஆட்சிக்கு அவர்கள் தாமாகவே முற்றுப்புள்ளி எழுதிக் கொள்வார்கள்


krishna
மே 13, 2024 19:46

MANOJ OVER BUILD UP DUMMY PIECE ELLAM DRAVIDA MODEL KUMBALUKKU KAI VANDHA KALAI.SINGAM ANNAMALAI PATHI ELLAM KARUTHU PODUM THAGUDHI KOODA UNGALUKKU KIDAYAADHU.


kamal
மே 13, 2024 19:31

ஆளுனர் அனுமதி தேவை இல்லை அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த பத்திரிகை பிதற்றுகிறது இவனை விட்டால் ஆளுநரை டிராபிக் போலீஸ் அளவுக்கு கொண்டு வந்து விட்டுறுவான்


sridhar
மே 13, 2024 19:28

அப்போதைய பேப்பரில் வந்த உண்மை சம்பவம் தான் இது சரித்திர உண்மையை சொல்வது தவறா இது மட்டும் அல்ல, அடியே மீனாட்சி உனக்கெதற்கு மூக்குத்தி என்று கேட்டதும் அண்ணாதுரை தான்


Dharmavaan
மே 13, 2024 19:17

அப்படியானால் இந்த புரளியை கிளப்பியது யார் அந்த கைக்கூலி மீது என்ன நடவடிக்கை


Rajathi Rajan
மே 13, 2024 19:01

ஆமா தம்பிமலையே கைது பண்ண ஏன் கவர்ணர் அனுமதி தரணும்,, உள்ள தொக்கி போட்டு,, ரெண்டு,,,,, தாழ் சரியாய் ஓடும்


சி சொர்ணரதி
மே 13, 2024 22:45

எங்கே இருந்திடா வர்றீங்கள்,திராவிட நாடா?. எது மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகள் சேர்ந்த திராவிட மொழிகள் என்று தான் கேள்விபட்டு உள்ளேன். திராவிட நாடா? எங்கே இருக்கிறது?. கொஞ்சம் சொல்லவும் ராஜாதி ராஜா??????? இந்து பத்திரிக்கை அண்ணாமலை சொல்லிய விஷயம் வெளிவந்து உள்ளது தெரியாமல் கேஸ் போட்டு உள்ளனர். முக்கறுப்பட போவது பியூஸ் பல்பு தான்... கேஸ் போட்டவன் ஏன்டா போட்டோம் என்று நினைக்கும் அளவு பதில் இருக்கும். தட்டிப்பார் தொட்டுப்பார் வசனம் பேசும் முதல்வரை கொண்டதற்கு தத்தி தான் வெட்கி தலை குனிய வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
மே 13, 2024 18:57

அண்ணாமலை ஒரு கவுன்சிலராகூட இல்ல அதுக்கு எதுக்குய்யா, கவர்னர் அனுமதி? காமெடியா இருக்கே? அண்ணாமலை வழக்கு பதிய அனுமதின்னு இன்னைக்குத்தான் பொதுஜனத்தில் ஒருவனாகிய நான் கேள்விப்பட்டேன் இது என்னமோ அகில உலகம் முழுவதும் பரவுன மாதிரியும் இது கொஞ்சம் ஓவர் பில்டப் மாதிரி தெரியல “ஓவர் பில்டப், ஒடம்புக்கு ஆகாது”? அது ஒரு டம்மி பீசு?


enkeyem
மே 13, 2024 19:46

எப்படியோ அந்த பியூஸ் மனுஷ் என்ற கேடி தானாகவே பெரிய ஆப்பை சொருகிக்கொண்டார் வழக்கு கோர்ட்டுக்கு போகட்டும் அப்புறம் இருக்கு மிகப்பெரிய ஆப்பு அண்ணாமலையிடம் வாட்ச்சுக்கு பில் கேட்டு செந்தில் பாலாஜி வசமாக தானே ஆப்பை வழிய சொருகிக்கொண்ட மாதிரி


Nagendran,Erode
மே 14, 2024 06:21

டம்மி பீசை பார்த்து ஏன்டா இப்படி அலர்றீங்க?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ