உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது; அண்ணாமலை பதிலடி

முதல்வருக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது; அண்ணாமலை பதிலடி

கோவை: 'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான் முதல்வருக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்கள். எங்களுக்கு தேவையில்லை' என்று முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: முதல்வர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டை பொறுத்தவரையில் நேரடி நிதிப் பகிர்வு என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீட்டு திட்டம், விவசாயிகளுக்கான கிஷான் சமான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xhdwfrm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோடி அரசு வந்த பிறகு, தமிழகத்திற்கு கொடுத்த பணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. எதன் அடிப்படிடையில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். கடந்த காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே தமிழகம் பெயர் சொல்லப்பட்டது. 6 பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரே இல்லை. எல்லா முறையும் அனைத்து மாநிலத்திற்கும் சிறப்பு திட்டம் வராது. தமிழகத்திற்கு 2021-22ம் ஆண்டில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கொடுத்தனர். போன வருடம் ஆந்திரா, இந்த வருடம் பீஹாருக்கு கிடைத்துள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் எல்லா மாநில ஊர்திகளும் அனைத்து ஆண்டுகளும் பங்கேற்க முடியாதோ, அது போலத்தான் பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறாது. அதை வைத்து ஏன் முதல்வர் அரசியல் செய்ய வேண்டும்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது எவ்வளவு நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டது என்றும், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? மேடை போட்டு விவாதிக்க பா.ஜ., தயார். மத்திய பட்ஜெட் குறித்து ஆர்.எஸ்., பாரதி விவாதிக்க தயாரா? என்று கேட்டார். நீங்கள் மத்திய பட்ஜெட் குறித்து பேசுங்கள். நாங்கள் மாநில பட்ஜெட் குறித்து பேசுகிறோம். யார் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வரட்டும். முதல்வருக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாகத் தான் அறிவாலயத்தில் இருந்த சில பேர், அடித்து விடுவேன், மிதித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். உலகளவில் மோடியின், இந்தியாவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிய வரும். லோக் சபா தேர்தலில் பா.ஜ., வலிமை இழந்து விட்டதாக முதல்வர் பேசினார். அதன்பிறகு நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பிஹாரில் வெற்றி பெறப் போகிறோம். லோக் சபா தேர்தலில் தி.மு.க., 7 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ளார். 2026 தேர்தலில் 20 சதவீதம் ஓட்டுக்களை இழப்பார். டப்பிங், கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முதல்வரின் பையனுக்கு தேவைப்படுகிறது. உதயநிதிக்கு டப்பிங் பண்ண சந்தானம் அண்ணன் தேவைப்படுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு டப்பிங் பண்ண அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்து கொண்டிருக்கிறார். மொத்தம் 35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான் முதல்வருக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்கள். எங்களுக்கு தேவையில்லை.சி.ஏ.ஜி., ஆய்வுக்கு இந்து அறநிலைத்துறை ஆவணங்களை சமர்ப்பிக்க மாட்டிங்கிறாங்க. தமிழகத்தில் ஒரு உதவாத, மக்களுக்கு உபத்திரம் கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது. தைரியம் இருந்தால், இந்து அறநிலையத்துறை ஆவணங்களை சி.ஏ.ஜி., ஆய்வு கொடுங்கள். ஆட்சிக்கு வந்த உடனே முதல்நாள் இந்து அறநிலையத்துறையை ஆய்வு செய்வோம். சென்னையில் ஒரு விமானக் கண்காட்சியை ஒழுங்காக நடத்த முடியவில்லை. அதைவிட்டு விட்டு மணிப்பூர் அரசியலைப் பற்றி பேசுகிறார், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sankaranarayanan
பிப் 16, 2025 21:18

மொத்தம் 35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான் என்று அண்ணாமலை கூறுவது தவறு அதற்கு மேலும் கட்சிமாறியுள்ளனர் அது எங்களுடடைய திறமையை காண்பிக்கிறது எங்களிடம் பணம் உள்ளது நாங்கள் அவர்களது தவறுகளை மன்னித்துவிட்டு திரும்பவும் அமைச்சர் பதவி வழங்குவோம் அது எங்களுடைய மன்னிப்போம் மறப்போம் என்ற எங்களிடையேஉடன்பிறப்பு pகொள்கை நீதி மன்றமே கேட்டால்கூட முடியாது ஏனென்றால் அங்கேயும் எங்களது அடிமைகள் அதிகமானவர்கள் உள்ளார்கள்


K.Ramakrishnan
பிப் 15, 2025 21:23

பா.ஜ.வில் இருப்பவர்கள் யார்? வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம்.. திமுகவில் இருந்து வந்தவர்கள். கருநாகராஜன் யார்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா யார்? சரத்குமார், ராதிகா யார்? நடிகை குஷ்பு எந்த கட்சியில் இருந்து வந்தார்? மற்ற கட்சிகளின் சங்கமம் தானே பா.ஜனதா.


Rajathi Rajan
பிப் 15, 2025 21:13

சூரியனை பார்த்து என்னமோ ......................, குது


முருகன்
பிப் 15, 2025 20:54

உங்கள் கட்சியில் இருப்பவர்கள் எங்கே இருந்து வந்தவர்கள்


K.n. Dhasarathan
பிப் 15, 2025 20:35

இந்த அண்ணாமலை எதையும் உருப்படியாக பேச மாட்டாரா ? ஒரு விஷயம் பொய் ஜே பி என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஈ. பி .எஸ். வழி மொழிகிறார் அதற்க்கு பெயர் என்ன? டப்பிங் தான். நீட், ஒன்றிய பட்கேட், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமை, தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமை எதற்கும் வாயை திறக்கமாட்டேன் என்கிறார், முதல்வர்தான் நேருக்கு நேர் எதிர்த்து பேசுகிறாரே, பிறகு என்ன, புரியலையா ? சரி அடுத்து கல்விக்கு நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசு, உண்டா ஈல்லையா நேரடி பதில் தேவை .


Ray
பிப் 15, 2025 20:20

Culture of peace - The peace imperative is the idea that peace is essential for the worlds development and that its possible to achieve peace through cooperation and understanding.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 20:20

தமிழ் சங்கமம் விழாவுக்குப் போன தமிழ் கலைஞர்கள் மீது நாக்பூர் ரவுடிகள் ரயில் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தாக்கினார்கள். அண்ணாமலை மற்றும் அவரோட அடிப்பொடிகள், பாஜக கொத்தடிமைகள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்??


Bala
பிப் 15, 2025 20:08

திராவிட மாடல் என்றாலே பொய் பித்தலாட்டம் . இருந்தாலும் அண்ணாமலை அவர்கள் விடாமல் பொய் புரட்டு திராவிடத்தை தோலுரித்துக்கொண்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டு வருகிறார். ஒருபக்கம் சீமான், ஒருபக்கம் அண்ணாமலை இருவரும் தமிழக மக்களை ஏமாற்றும் திராவிட கருத்தியலை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர். வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை மற்றும் சீமான் அவர்களுக்கு


K.Ramakrishnan
பிப் 15, 2025 19:21

அண்ணாமலை என்னவோ... பிரதம மந்திரி நினைப்பில் ஆணவமாக பேசுகிறார். யாராக இருந்தாலும் நாவடக்கம்தேவை. திருச்சி சூர்யா சிவா வைக்கிற குற்றச்சாட்டுக்களுக்குஇது வரை பதில் அளிக்காத அண்ணாமலை, மற்றவர்களை பார்த்து கைநீட்டுவது நியாயம் அல்ல.


என்றும் இந்தியன்
பிப் 15, 2025 19:11

முதல்வருக்கு சினிமா மாதிரி டப்பிங் யாரும் கொடுப்பதில்லை, அவர் மிகவும் நல்ல துண்டுசீட்டு உளறல் கதாநாயகன். அப்படி கையில் துண்டு சீட்டு இல்லாத போது அவர் செய்வது ஆய்வு ஆய்வு என்று வாய்வு விடுவது. இவர் பின்னால் இருக்கும் திருட்டு திராவிட அறிவிலி அரசியல் வியாதிகள் டப்பா டப்பா அடிக்க மட்டுமே லாயக்கு வேறு எதற்கும் ஒரு பைசா புண்ணியமில்லை அவர்கள் கடமைகளை அமைச்சரோ எம்.எல்.ஏ., வோ எம்.பி., யோ ஒருபோதும் செய்வதேயில்லை வெறும் டப்பா ஒரு அறிவிலியை பற்றி அவ்வளவு தான் அவர்கள்செய்வது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை