உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு

அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.மாநில தலைவராக பொறுப்பேற்கும் விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு இதற்கு முன் இருந்த தலைவர்களே காரணம். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகம் முழுதும் அண்ணாமலை பயணம் செய்து இந்த கோபுரத்தை கட்டி முடித்து மேல் கலசம் வைத்துள்ளார். நமது வேலை, அதற்கு கும்பாபிஷேகம் மட்டும் தான் செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதனை நடத்தப் போகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8jrmawb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா, நாடு ஆள்பவர்கள் காடு ஆளப்போகின்றனரா என்பதை கடவுள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் 2026 ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும். தாமரை மலர்ந்தே தீரும். வரும் தேர்தலில் 4 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். அதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வளவு பெரிய கட்சியில் பெரிய பொறுப்பை தந்து உள்ளீர்கள். அதனை பொறுப்பாக எடுத்து செயல்பட வேண்டும் என்றால் கூட பயமும் அச்சமும் உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து விஷயத்திலும் அண்ணாமலையின் பாணி தனி. என்னுடைய விஷயம் வேறு. அவர் புயலாக இருந்தால், நான் தென்றலாக தான் இருக்க முடியும்.தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மக்களால் ஏற்க முடியாத ஆட்சியாக, ஊழல் நிறைந்த ஆட்சியாக,பெண்களை மதிக்காத ஆட்சியாக, பாலியல் வன்கொடுமை நடத்துகின்ற ஆட்சியாக , மதுவுக்கு அடிமையாக்கும் ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.என்னிடம் பொறுப்பை அண்ணாமலை கொடுத்து உள்ளார். அடுத்த 3 ஆண்டில் நான் வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டும். இதற்கு இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

இ.பி.எஸ்., வாழ்த்து

நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

spr
ஏப் 13, 2025 18:34

"புயல் எத்தனை வலுவானதோ அத்தனைக்கு வேறுபாடின்றி மக்கள் அனைவரையும் வருத்தும் தென்றல் எல்லோருக்கும் மகிழ்வைத் தரும்" இதனை அறிந்த இவர் ஒரு அனுபவமுள்ள அரசியல்வியாதிதான் . பாவம் திரு அண்ணாமலைக்குத்தான் தெரியவில்லை ஏற்கனவே அஇஅதிமுக அனுபவம் நட்பு அடிமட்டத் தொண்டர் வலிமை இவருக்குத் துணை செய்யும் ஆனாலும் தமிழகத்தில் பாஜக சீரங்கம் மொட்டைக் கோபுரமாக இல்லாமல் இருந்தால் சரி


venugopal s
ஏப் 13, 2025 17:20

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிறது அண்ணாமலையின் மைண்ட் வாய்ஸ்!


pmsamy
ஏப் 13, 2025 08:47

இவங்க எல்லாம் யாரு எந்த ஊரு சேர்ந்தவங்க. சினிமால பாட்டு எழுதறவங்களா?


அப்புசாமி
ஏப் 13, 2025 07:34

வளிமண்டல கீழடுக்கு மேலடுக்கு சுழற்சின்னு புவியரசன், ரமணன் ரேஞ்சுக்கு போகாம இருந்தா சரி


aaruthirumalai
ஏப் 13, 2025 06:08

புயல் கரையை கடந்தது.


அப்பாவி
ஏப் 13, 2025 05:49

நாலு கோடி யை தென்றலாக வீசியே மறையச் செய்து விட்டார். புயல் ஒண்ணும் செய்ய முடியலை.


Thetamilan
ஏப் 13, 2025 00:51

வடிவேலுக்கும் அண்ணாமலைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ? செயலிலும் இப்போது நடை உடையிலும் அப்படியே அச்சடித்ததுபோல் உள்ளது


Rajinikanth
ஏப் 12, 2025 23:12

"வரும் தேர்தலில் 4 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். அதற்கான வாய்ப்பு உள்ளது" 4 தொகுதிகள் தானா?


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 00:21

18% வாக்கு வங்கி இருக்குன்னு தம்பட்டம். ஒண்ணுக்கே நாக்கு தள்ளீடும் ..


K.Ravi Chandran, Pudukkottai
ஏப் 12, 2025 23:00

மிகவும் நாசூக்காக அதே நேரத்தில் எல்லோருக்கும் புரியும் படி மிகச் சரியாக சொல்லி இருக்கிறார். ஒரு புயலினால் அழிவுதான் அதிகம் உண்டாகும். இதமான தென்றலைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அனைவரையும் அணைத்துத் செல்லும் தென்றல்தான் இப்போது வேண்டும்.


Anantharaman Srinivasan
ஏப் 12, 2025 21:28

அண்ணாமலை நேர்மை. நாகேந்திரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை