உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை

மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை

சென்னை: கடந்த மூன்றரை மாதங்களாக காலணி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலை, பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று, காலணியை அணிந்தார்.தமிழக பா.ஜ., மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். சென்னை வானகரத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறினார். அப்போது, தி.மு.க., அரசுக்கு எதிராக காலணி அணியாமல் இருந்து வந்த அண்ணாமலைக்கு, மேடையிலையே நயினார் நாகேந்திரன் ஒரு கோரிக்கை வைத்தார்.தான் வாங்கி வந்த காலணியை கொடுத்து, இதனை அணிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணாமலையும் அவரது கோரிக்கை ஏற்று, மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணியை அணிந்து கொண்டார்.அப்போது, பேசிய நயினார் நாகேந்திரன், '2026ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. எனவே, அண்ணாமலை இன்றே காலணி அணிய வேண்டும்,' என்று கூறினார்.

சபதம்

சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை கண்டித்து பா.ஜ., மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த டிச.,27ம் தேதி தனது வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். அப்போது, தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என்று சபதம் போட்டிருந்தார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போதே, அண்ணாமலை தான் அணிந்திருந்த ஷூவை கழற்றியது குறிப்பிடத்தக்கது.தற்போது, தமிழக அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அண்ணாமலையை மாற்றப்பட்டிருக்கும் சூழலில், அவர் காலணியை அணிந்து கொண்டுள்ளார்.

ஒற்றை இலக்கு

இதனிடையே, பா.ஜ.,வின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து கூறி அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், 'என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்! வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், நயினார் நாகேந்திரன் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தி.மு.க.,வை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Indian
ஏப் 15, 2025 09:34

சிரிப்பு போலீஸ். சபதம் எல்லாம் வேஸ்டடா போச்சே. வெத்து சவடால்க்கு கொறச்சல் இல்ல


Indian
ஏப் 15, 2025 09:33

என்ன ஒரு தியாகம்.. ஒரு நாடகம் முடிந்தது. நாங்க நம்பிட்டோம்


பல்லவி
ஏப் 14, 2025 06:36

தலிவரின் தந்திரம் நரியை வென்று விட்டது


பல்லவி
ஏப் 13, 2025 20:08

அது சரி அப்பவே சீன் போட்டார் இப்ப சீனை திருப்பி விட்டார்கள் சாராயத்திற்கு பதில் டாஸ்மாக் ஆற்று நீரை வாங்கி விற்றால் போதுமே


VSMani
ஏப் 13, 2025 18:15

கடைசியில் அண்ணாமலையின் சபதமும் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துவிட்டது. இவர் காலனி அணிந்தால் என்ன, காதணி அணிந்தால் என்ன. இதனால் யாருக்கு ன்ன லாபம் ?


P. SRINIVASAN
ஏப் 13, 2025 15:55

என்ன ஒரு தியாகம்.. ஒரு நாடகம் முடிந்தது. நாங்க நம்பிட்டோம்


பல்லவன்
ஏப் 13, 2025 08:39

வடையும் காணாமலே போச்சு


அப்பாவி
ஏப் 13, 2025 05:52

அப்பாடா... உருப்படாத சபதத்தை ஒரு நொடியில் முடித்து வைத்த நைனா வாழ்க.


naranam
ஏப் 13, 2025 03:14

இதெல்லாம் தேவையில்லாத எதற்கும் உதவாத ஸ்டண்ட். உணர்ச்சி வசப்படாமல் சரியான முறையில் திமுக அரசை எதிர்த்துப் போராட வேண்டும். நீங்கள் காலணி அணியாவிட்டால் அதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை?


மதிவதனன்
ஏப் 13, 2025 01:06

அறிவாலய செங்கல் உறுவுவேன் என்றவன் பதவியை உருவி விட்டார்கள் , DMK ஆட்சி நீக்கும் வரை செருப்பு போடமாட்டேன் என்று சொன்னவுடன் இவர்க்கு ஷூ கொடுக்கும் நண்பர்கள் சந்தோசமா இருந்தனர் இப்போ அந்த சூளுரை தீக்கிரை